Bigg Boss Tamil 7: மொத்தம் 18 பேர்.. கூல் சுரேஷ் முதல் விஜய் வர்மா வரை.. ஆக்ஷன் ஸ்டார்ட்ஸ்!

Oct 01, 2023,10:50 PM IST

சென்னை: பிக் பாஸ் தமிழ் 7வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் அறிமுகமான நிலையில், கடைசி போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் திருச்சியைச் சேர்ந்த நடனக் கலைஞர் விஜய் வர்மா. 


18. விஜய் வர்மா




திருச்சியைச் சேர்ந்த விஜய் வர்மா பிக் பாஸ் தமிழ் 7வது சீசனின் கடைசிப் போட்டியாளராக அறிமுகமானார். இவர் ஒரு நடனக் கலைஞர்.  திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்.  சமூக வலைதளங்களில் பிரபலாகவும் இருக்கிறார் விஜய்


17. அனன்யா ராவ்




கன்டென்ட் கிரியேட்டர் அனன்யா ராவ் பிக் பாஸ் போட்டியில் நுழைந்துள்ளார். இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே தமிழ் கற்றுக் கொண்டு வந்திருப்பதாக ஆர்வத்துடன் கூறுகிறார் அனன்யா ராவ். இவர் ஒரு சிறந்த பரத நாட்டிய  கலைஞரும் கூட.


16. எழுத்தாளர் பவா செல்லதுரை




பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை பிக் பாஸ் போட்டியில் பங்கேற்கிறார். பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எழுத்தாளர் போட்டியாளராக பங்கேற்கிறார். திருவண்ணாமலையைச் சேர்ந்த பவா செல்லதுரை மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, கதை பிரசங்கியும் கூட.


15. நடிகை விசித்ரா




முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ரா பிக் பாஸ் வீட்டில் நுழைகிறார். கவர்ச்சி வேடங்கள் மட்டுமல்லாமல் காமெடியாகவும் கலக்கியவர் நடிகை விசித்ரா. தான் மிகவும் எமோஷனல், மென்மையானவர், அன்பான பெண் என்று புன்னகையுடன் கூறுகிறார் விசித்ரா. பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர், தான் என்றும் விசித்ரா கூறுகிறார்.


14. பின்னணிப் பாடகர் யுகேந்திரன்




பிரபல பின்னணிப் பாடகர் மறைந்த மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். ஜேசுதாஸ் மற்றும் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆகியோரின் பாடல்களைப் பாடியபடி அவர் பிக் பாஸ் மேடையில் தோன்றினார்.


13. பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம்




பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சரவண விக்ரம், பிக் பாஸ் போட்டியாளராக வந்துள்ளார். அவர் கமல்ஹாசனைக் கட்டிப்பிடித்து அவரது ஆசியைப் பெற்று வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.


12. மாயா கிருஷ்ணன்




விக்ரம் படத்தில் நடித்துள்ள மாயா கிருஷ்ணன் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். மதுரைக்காரரான மாயா, ஒரு சகலாகலவல்லி. நடனம், நடிப்பு, பாட்டு என்று பல வித்தைகளில் கலக்கக் கூடியவர். கமல்ஹாசனின் தீவிர ரசிகையும் கூட மாயா.


11. நடிகர் விஷ்ணு விஜய்




கனா காணும் காலங்கள் நடிகர் விஷ்ணு விஜய் பிக் பாஸ் போட்டியின் 11வது போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். இயக்குநராகும் ஆர்வத்துடன் நுழைந்து நடிகராக மாறியவர் விஷ்ணு விஜய். 5 வருடமாக பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக முயன்று வந்தவர் விஷ்ணு விஜய். தனது சித்தப்பாதான் தனது உந்து சக்தி என்று கூறும் விஷ்ணு விஜய் இந்த வெற்றியை தனது சித்தப்பாவுக்கு சமர்ப்பணம் செய்யக் காத்திருப்பதாக கூறுகிறார்.

10. ஐஷு





ஊட்டியைச் சேர்ந்த ஐஷு ஒரு நடனக் கலைஞர். நடனத்தில் சாதிக்கத் துடிக்கும் இவர் பிக் பாஸ் அறிமுகம் தன்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


9. ஜோவிகா விஜயக்குமார் 




நடிகர் விஜயக்குமாரின் பேத்தி, நடிகை வனிதா விஜயக்குமாரின் மகள் ஜோவிகா 8வது நபராக பிக் பாஸ் வீட்டுக்குள் அறிமுகமாகியுள்ளார். நடிப்பில் முத்திரை பதிக்க பிக் பாஸ் தனக்கு உதவும் என்று ஜோவிகா நம்பிக்கை.


8. அக்ஷயா உதயக்குமார்




நடிகை அக்ஷயா உதயக்குமார், லவ் டுடே படத்தில் நடித்தவர்.  கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஜாலி பொண்ணு. நடிப்பு மீது தீராக் காதல் கொண்டவர்.  ஷார்ட் வீடியோக்களுக்குப் பெயர் போனவர். 


7. மணி சந்திரா




பிக் பாஸ் வீட்டுக்குள் 7வது போட்டியாளராக மணி சந்திரா வருகை புரிந்துள்ளார். நடனத்தில் கலக்கக் கூடியவரான மணி சந்திரா, ஆடாத இடமே இல்லை என்று சொல்லலாம். கல்ச்சுரல்களில் நிபுணரான மணி சந்திரா, விஜய் டிவியின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவர். ஜோடி சீசன் 9ல் டைட்டில் வின்னர் ஆவார்.  அதேபோல கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் செமிபைனலிஸ்ட் ஆவார். மானாட மயிலாட சீசன் 10ல் பங்கேற்றவர்.


6. வினுஷா தேவி




பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி6வது போட்டியளராக அறிமுகமாகியுள்ளார். கண்ணம்மா கேரக்டரில் கலக்கிய வினுஷா தேவி, சின்னத்திரையில் பெரிய முத்திரை பதிக்கும் ஆசையில் உள்ளவர். கலர் பாகுபாடு, ஒல்லியான உடல் வாகு ஆகியவற்றால் பல இடங்களில் நிராகரிப்புக்குள்ளானவர். ஆனால் அதையும் தாண்டி சாதித்தவர் வினுஷா தேவி.



5. நிக்ஸன்




ராப் பாடகர் நிக்ஸன் 5வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். திரைப்படத் துறையில் பெரிதாக சாதிக்கத் துடிக்கும் இளைஞர் நிக்ஸன். நடிப்பு, எடிட்டிங், பாடல் எழுதுவது, பாடுவது, நடனம் என்று கலக்கலாக அனைத்துத் துறையிலும் சாதனை படைக்கத் துடிக்கிறார் நிக்ஸன். 


4.  பிரதீப் ஆண்டனி




இயக்குநராக, நடிகாரக வலம் வரும் பிரதீப் ஆண்டனி, 4வது போட்டியாளராக களம் புகுந்துள்ளார். அருவி, தாடா, வாழ் படங்களில் நடித்துள்ளார் பிரதீப் ஆண்டனி. நடிகர் கவினின் சிறந்த நண்பரும் கூட. கவின் கூட பிக் பாஸ்  போட்டியில் பங்கேற்றவர்தான். 


3. ரவீனா தாஹா




சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா 3வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். சின்னக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சின்னத் திரையில் முத்திரை பதிக்கும் நடிகையாக வலம் வரும் ரவீனா தாஹா, குழந்தைத்தனம் மாறாத தனது குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.


2. பூர்ணிமா ரவி




பிக் பாஸ் தமிழ் வீட்டுக்குள் 2வது போட்டியாளராக பூர்ணிமா ரவி நுழைத்துள்ளார். இளம் நடிகையான பூர்ணிமா ரவி வேலூரைச் சேர்ந்தவர்.  ஐடி துறையில் வேலை பார்த்தவர். அந்த வேலை பிடிக்காததால்,  நடிப்புக்கு மாறினார். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பெரிய பிரேக்குக்காக காத்திருக்கிறார் பூர்ணிமா ரவி. ஜாலி டைப்பான பூர்ணிமா, எமோஷனலும் கூட. அட்வென்ச்சர் பிடிக்கும் என்பதால் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆர்வத்துடன் வந்திருப்பதாக பூர்ணிமா ரவி கூறியுள்ளார். நான் சிங்கிள்தான்.. என்று சிரித்தபடி கூறும் பூர்ணிமா ரவி.. பிக் பாஸ் வெற்றியாளராக மாறுவாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.


1. கூல் சுரேஷ்




கோமாளித்தனமாக ஏதாவது செய்து சர்ச்சையில் சிக்கும் கூல் சுரேஷ் முதல் போட்டியாளராக கமல்ஹாசனால் அறிமுகப்படுத்தப்பட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்.


இதுவரை காமெடியனாக, ஜோக்கராக, சர்ச்சையாளராக மட்டுமே பார்க்கப்பட்ட கூல் சுரேஷ் குறித்த அறிமுக வீடியோவில் அவர் கூறிய விஷயங்கள் அவர் குறித்த சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளன. உண்மையான சுரேஷை அனைவரும் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மக்கள் மேலும் பல வேஷங்களை அவர்களே கொடுப்பார்கள் என்று கமல்ஹாசன் கூறியதும் சரியான வார்த்தையாக இருந்தது.


வழக்கம் போல தனது பாணி பன்ச் வசனத்தை முழங்கியபடி பிக் பாஸ் மேடையிலிருந்து விடை பெற்று வீட்டுக்குள் புகுந்துள்ளார் கூல் சுரேஷ்.. இனிதான்.. என்னெல்லாம் நடக்கப் போகுதுன்னு பார்க்கணும்.


சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்