சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் போட்டி முறைகள், விதிகள் என இரண்டும் மாற உள்ளதாக கமல் கூஸறும் புதிய ப்ரொமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை நிறைவு செய்து, தற்போத 7வது சீசனும் துவங்க உள்ளது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் துவக்க விழா இன்ற மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதனால்புதிய ப்ரொமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல் தெரிவித்துள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அந்த ப்ரொமோவில் மெரூன் கலர் கோட் சூட்டில் செம ஹேண்சமாக காட்சி தரும் கமல், இந்த முறை வீட இரண்டாக போகிறது. விதிகள், போட்டிகள் என எல்லாமே மாறுகிறது என தெரிவித்துள்ளார். நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி இன்று துவக்கப்பட உள்ளது. இது விஜய் டிவி.,யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
100 நாட்கள் கொண்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 20 பேர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். இந்த முறை இரண்டு வீடுகள் என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 போட்டியாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட உள்ளனர். எல்லாமே புதுசாக இருப்பதால் இந்த சீசன் முந்தைய சீசன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}