ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

Feb 11, 2026,05:15 PM IST

சென்னை: ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,  திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நன்மைகளைச் செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பல நெருக்கடிகளைக் கொடுத்து, துரோகத்தையும் அநீதிலையும் செய்து வருகிறது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்.




சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் எங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் தான். தமிழக மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எடுத்து கணக்கெடுப்பில் திமுக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கூட திமுக ஆட்சியில் அடைந்தோம். தலைசிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் 33 கல்லூரிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம்.


மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் ஒன்றிய அரசாலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது நடக்காது. கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக - காங்கிரஸ் இடையே குழப்பம் இல்லை. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை

news

தேடி தேடி அலையும் மனசு நொந்து தொலையும்!

news

Poem: இருமனம் இணைந்த காவியம்

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

அதிகம் பார்க்கும் செய்திகள்