சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற மதுரை ஐகோர்ட் கிளையின் தீர்ப்பை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் தான். அந்த தீபத் தூண் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. அதனால் அங்கு தீபம் ஏற்றலாம். இதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலை மீது ஒரே ஒரு நாள் தீபம் ஏற்றுவதால் பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என தமிழக அரசு கூறுவது அபத்தமானது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

மதுரை ஐகோர்ட் கிளையின் இந்த தீர்ப்பை பாஜக.,வினரும், இந்து சமய அமைப்பினரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பாக தேங்காய் உடைத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்பதை மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பினை உளமார வரவேற்கிறேன்.தமிழ்ப் பண்பாட்டை ஒடுக்க நினைப்பவர்களுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தை நடத்தி தமிழர்களாகிய நாம் வெற்றி கண்டுள்ளோம். ஆளும் அரசு ஆயிரம் அடக்குமுறைகளை ஏவினாலும் கொஞ்சம் கூட மனம் துவளாமல் இப்போராட்டத்தை முன்னெடுத்த முருக பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழர்களின் தீபமேற்றும் உரிமையை மீட்டெடுத்ததைக் கொண்டாடும் விதமாக, இன்று மாலை 6 மணிக்கு அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து. "வெற்றிவேல்! வீரவேல்!” என மாக்கோலமிட வேண்டுமென உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}