திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும்...மதுரை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Jan 06, 2026,11:24 AM IST

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீண்ட கால சட்டப் போராட்டத்தில், ஒரு முக்கிய கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தனது இறுதித் தீர்ப்பை வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத் தூண். அதில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.


திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சட்டச் சிக்கல்களும் நிலவி வருகின்றன. இந்நிலையில் 2025ம் ஆண்டில் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கேட்டு ராம ரவிக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.




ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்து, 144 தடை உத்தரவு போட்டதால் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படவில்லை. மேலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், தீபம் ஏற்றும் இடம் தர்காவுக்கு அருகில் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநான் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அமர்வு, திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத் தூண் தான். மலை மீதுள்ள தீபத் தூணில் தேவஸ்தானம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீது ஒரே ஒரு நாள் தீபம் ஏற்றுவதால் பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என தமிழக அரசு கூறுவது அபத்தமானது. 


திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவிற்கு கீழ் செல்லக் கூடாது. தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை நிராகரித்து தேவஸ்தானம் கூறும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல. தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும். தீபத்தூணில் தீபம் ஏற்றுவது ஆகமவிதிகளுக்கு எதிரானது என தமிழக அரசு நிரூபிக்கவில்லை என கூறி தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக வழக்கை முடித்த வைத்ததுடன், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்