திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

Jan 05, 2026,04:46 PM IST

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீண்ட கால சட்டப் போராட்டத்தில், ஒரு முக்கிய கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. இந்தத் தகவல் ஆன்மீக அன்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சட்டச் சிக்கல்களும் நிலவி வருகின்றன. இந்நிலையில் 2025ம் ஆண்டில் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கேட்டு ராம ரவிக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.




ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்து, 144 தடை உத்தரவு போட்டதால் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படவில்லை. மேலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், தீபம் ஏற்றும் இடம் தர்காவுக்கு அருகில் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநான் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நாளை தீர்ப்பு அளிக்கிறது. நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

news

கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

news

ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

news

காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)

news

தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?

news

திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை

news

பொம்மையம்மா.. பொம்மை!

news

நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

அதிகம் பார்க்கும் செய்திகள்