டில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற சாதனையை இதன் மூலம் அவர் பெற்றுள்ளார்.
பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் என்ன சொல்லுவார் என்பதை தாண்டி, இந்த முறை அவர் பட்ஜெட் தாக்கலுக்கு வரும் போது என்ன நிறத்தில் புடவை அணிந்து வருவார் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. காரணம், அவரது புடவை மற்றும் அதன் நிறம் என்பது அன்றைய பட்ஜெட் உரையின் மறைமுகமாக குறியீடாக இருக்கும். அதனால் இன்றைய பட்ஜெட் உரையும் எதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக, குறிப்பாக எந்த மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புக்களை கொண்டதாக இருக்கும் என்பதை அவரது புடவையை வைத்தே கணித்து விடலாம்.
2019ம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய வரும் போது பிங்க் நிற மங்களகிரி பட்டுப்புடவை அணிந்து வந்தார். இது மங்களத்தின் அடையாளமாகவும், புதிய துவக்கமாகவும் கருதப்படுகிறது. 2020ம் ஆண்டு பட்ஜெட்டின் போது மஞ்சள் நிற பட்டுப்புடவை அணிந்து வந்தார். கொரோனா பாதிப்பு இருந்த சமயத்தில் வளம், பொருளாதார வளர்ச்சி குறிக்கும் வகையில் இந்த புடவை அமைந்திருந்தது.

2021ம் ஆண்டு, தெலுங்கானாவின் பாரம்பரிய போச்சனப்பள்ளி புடவை அணிந்து வந்தார். இது உள்ளூர் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதன் அடையாளமாகும். 2022ம் ஆண்டு, சாக்லேட் பிரெளன் நிற சோனிபுரி புடவை அணிந்து வந்தார். இது ஒடிசா மாநிலத்தில் பாரம்பரிய புடவையாகும். 2023ம் ஆண்டு சிறப்பு நிற பட்டுப்புடவை அணிந்து வந்தார். இது கர்நாடகாவை பாரம்பரிய புடவையாகும். 2024ம் ஆண்டு மேற்குவங்கத்திற்குரிய நீல நிற துஷ்சார் பட்டுப்புடவை அணிந்து வந்தார்.
2024ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது ஆந்திராவின் மங்களகிரி பட்டுப்புடவை அணிந்து வந்தார். 2025ம் ஆண்டு பட்ஜெட்டின் போது பீகார் சட்டசபை தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உணர்த்தும் விதமாக அந்த மாநிலத்தின் மதுபனி ஆர்ட் புடவையை அணிந்து வந்தார்.
2026ம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனால் எந்த மாநிலத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி, எந்த மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் உரையும். நிர்மலா சீதாராமன் அணிந்து வரும் புடவையும் இருக்கும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரூன் நிறத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து, இன்று காலை ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்காக ராஷ்டிரபதி பவன் சென்றுள்ளார் நிர்மலா சீதாராமன். அதனால் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அதிக திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}