செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 28ல் தீர்ப்பு...சென்னை கோர்ட் அறிவிப்பு

Mar 22, 2024,04:32 PM IST
சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது மார்ச் 28ல் தீர்ப்பு வழங்குகிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போதே செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. கோர்ட் உத்தரவின்படி அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 



இந்நிலையில் பல முறை ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி. அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் தனது அமைச்சர் பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

இத்தனை செய்தும் கூட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன்  கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 21ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நேற்று அவர் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.  அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி சிறைக் காவலை மார்ச் 22ம் தேதி (இன்று) வரை நீட்டித்து உத்தரவிட்டார்.  இதன் மூலம்  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இன்று செந்தில் பாலாஜி வழக்கு  சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். அல்லி  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது மார்ச் 28ல் தீர்ப்பு வழங்கப்படும்  என சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்