கரூர்: மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு விக்ரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இடைத்தேர்தலின் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பாடலை பாடினார். இதுகுறித்து சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை துரைமுருகன் பாடிய அதை பாடலை நானும் பாடுகிறேன். காவல்துறையால் என்ன செய்ய முடியும் என்று நானும் பார்க்கிறேன் என அவரும் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகார் ஆகஸ்ட் 17ஆம் தேதி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் இருந்து எஸ்.பி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததை தொடர்ந்து வழக்கறிஞர் ராஜேந்திரன் மீண்டும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கில் தாந்தோணி மலை போலீசார் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணி மலை போலீசார் இழிவாகப் பேசுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சீமானுக்கு அபராதத்துடன் இரண்டு ஆண்டுகள் சிறை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}