- சுமதி சிவக்குமார்
குழந்தை எனும் போதே மனம் குதூகலம் கொண்டு ஆடுகிறது. காரணம் அதன் சிரிப்பு.. கள்ளங்கபடம் இல்லாத கடலளவு சிரிப்பு. கவிழ்ந்து படுத்து கழுத்தை தூக்கி காலை நீட்டி ஆடும் பரதம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஈருயிர் இணைந்து ஓருயிர் கருவாகி காரிருள் அறையிலே பேரருள் கருணையாலே கருவே சதைப்பிண்டமாய் உருமாறி வளர்ந்து கைகால் முளைத்து மைபோல் இழைத்து சிரம் குனிந்து கரம் மடக்கி வட்டக் கருவறையோ வளர்ந்து அரைவட்ட கருவறையாகி இருபுறமும் உதைவாங்கி இரவென்றும் பகலென்றும் பாராமல் தலைமுட்டி தந்த துன்பங்கள் மறைந்தனவே.

ஏனெனில் ஈரைந்து மாதங்கள் முடியமுன் ஈன்றெடுத்தாள் ஒரு அழகிய குழந்தையை. அதன் முகம் கண்டு அகம் நிறைந்த மகிழ்ச்சியில் தான் பட்ட வலிகள் அத்தனையும் மறந்தாள். சுவடுகள் கூடத் தெரியாமல் காணாமல் போனது அதிசயமே. அவள் தான் தாய்.
இது குழந்தைக்கான கட்டுரையாச்சே இந்தம்மா அது பாட்டுக்கு தாயைப் பற்றி எழுதியிருக்கு என எண்ண வேண்டாம். தாயையைும் பாடலாம்.. போற்றலாம்.. கொண்டாடலாம்.. ஏனெனில் அவளும் ஒர் அழகிய குழந்தையாய் பிறந்தவள் தானே.
(சின்னசேலம் சுமதி சிவக்குமார் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)
ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?
சீனாவின் மகா மதில்.. உலக அதிசயங்கள் (தொடர்)
முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
நீ பார்த்த பார்வை.. When I looked into your eyes!
ஒரே நாளில் உருவானதல்ல.. ரோம சாம்ராஜ்ஜியம்.. ROME WASN'T BUILT IN A DAY
Vaikunda Ekadashi: சொர்க்கவாசல் நாயகனே.. கோவிந்தா கோவிந்தா!
{{comments.comment}}