டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு:
10% ஆக உள்ள முதலீடு வரம்பு 24 % ஆக அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடுகளில் அதிகரிக்க புதிய திட்டங்கள்.
மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க புதிய திட்டங்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் 7 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

புதிய சரக்கு வழித்தடங்கள்: கிழக்கே தான்குனி முதல் மேற்கே சூரத் வரை இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு இரயில் வழித்தடங்களை உருவாக்குதல்.
நீர்வழிப்பாதைகள்: அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழிப்பாதைகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல். இதில் முதற்கட்டமாக, ஒடிசாவின் தால்சர் மற்றும் அங்குல் போன்ற தாதுக்கள் நிறைந்த பகுதிகளையும், கலிங்காநகர் போன்ற தொழில் மையங்களையும், பாரதீப் மற்றும் தாம்ரா துறைமுகங்களுடன் இணைக்க தேசிய நீர்வழிப்பாதை 5 தொடங்கப்படும்.
கப்பல் பழுதுபார்க்கும் தளம்: உள்நாட்டு நீர்வழிப்பாதைகளுக்குப் பயன்படும் வகையில், வாரணாசி மற்றும் பாட்னாவில் கப்பல் பழுதுபார்க்கும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்கள் மேம்பாட்டுத் திட்டம்:
உயர்மதிப்பு கொண்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்காக, ஒரு புதிய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் தீயணைப்பு உபகரணங்கள் முதல் மின் தூக்கிகள் மற்றும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் (Tunnel வரை பல்வேறு வகையான உபகரணங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
பழவேற்காடு ஏரியில் சுற்றுலா
பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம். இந்திய முந்திரிகளை உலக சந்தைமயமாக்க திட்டம். கால்நடை மருத்துவமனைகளை நிறுவ புதிய கடன் திட்டம் உருவாக்கப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து சந்தன மர வளர்ப்பு திட்டம்
கலாச்சார சுற்றுலா மையங்கள்
கலாச்சார, ஆன்மீக, பாரம்பரிய சுற்றுலா மையங்கள் நாடெங்கும் உருவாக்கப்படும்.
5 மண்டல மருத்துவ மையங்கள்
தனியார் துறையுடன் இணைந்து 5 மண்டல மருத்துவ மையங்கள் நிறுவப்படும்.விளையாட்டு போட்டிகளை வளர்க்க, திறமைகளை ஊக்குவிக்க, பயிற்சியாளர்களை உருவாக்க திட்டம்.
பெண் தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்
பெண் தொழிலாளர்கள் வளர்ச்சிக்காக புதிய திட்டம் உருவாக்கப்படும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தொழில் பயிற்சி வழங்கப்படும்.
ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும். டிடிஎஸ் விகிதம் குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கோவில் நகரங்களுக்கு முக்கியத்துவம்
2, 3வது நிலை நகரங்கள், கோவில் நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மாநில வரி பகிர்வில் மாற்றமில்லை
16வது நிதிக்குழு ஏற்கப்படுகிறது. நிதிக்குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களுகு்கான வரி பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை. 42% என்ற அளவிலேயே தொடரும்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}