டில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார்.
கேரளாவில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தனர். இதனால் கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வைரசால் ஏற்பட்ட மரணம் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தலையிட்டு விசாரித்து வந்தது.

இது பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாண்டவியா, கேரளாவில் மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. நிபா வைரஸ் மேலாண்மை தொடர்பாக மாநில அரசுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றார். நிபா வைரசிற்கு முதல் நபர் ஆகஸ்ட் 30 ம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என கேரள முதல்வர் பினராய் விஜயனும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}