சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் என்ன செய்வது என்று திகைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை அறிக்கை வெளியிட்டுள்ள அறிவிப்பு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது என்று கூறலாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,ஏப்ரல் 3ம் தேதி முதல் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென்னிந்தியா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏனைய தமிழக ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 7 வரை தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று முதல் ஐந்தாம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
விஜய் வாகனத்தைப் பின் தொடர்ந்து வரக் கூடாது.. மரங்களில் ஏறக் கூடாது.. தவெக கோரிக்கை
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
பாமக.,வின் மாம்பழச் சின்னம்...அன்புமணிக்கு கிடைத்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்
ரோபோ சங்கரோட மறைவு வேதனையா இருக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. டிஏ உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு!
மர்ம நபரால் பரபரப்பு... தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை!
ஒருவர் மயங்கி விழுந்தால் உடனடியாக என்ன செய்யணும்னு உங்களுக்குத் தெரியுமா?
புதிய ஆப்பிள் ஐபோன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}