சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்பபு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் தமிழக மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பருவ மழை வெளுத்து வாங்கியது போலவே தற்போது வெயிலும் கோடைகாலத்திற்கு முன்னரே வெளுத்து வாங்கி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வெயில் அதிகரிப்பதினால் பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

வெளியில் தலை காட்ட முடியவில்லை. பல ஊர்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டு வெளுத்தெடுக்கிறது. இந்த நிலையில், கடுமையான வெயிலில் இருந்து மக்கள் 3 நாட்களுக்கு தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பின்னர் மார்ச் 24 மற்றும் 25 ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}