வாவ்.. அந்தக் கண்ணும், உதடும்.. அப்படியே "சில்க்" தான்.. அசத்த வரும் சந்திரிகா ரவி!

Dec 02, 2023,05:58 PM IST

சென்னை: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையும், மாடல் அழகியுமான சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதா வேடத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பர்ஸ்ட் லுக்கை சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளார். திடீர்னு பார்த்தால்... அட நம்ம சில்க் மாதிரியே இருக்கே என்று ஆச்சரியப்படுத்துகிறது அந்த பர்ஸ்ட் லுக்.


சில்க் ஸ்மிதாவைப் போல மிகக் குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த திரையுலகையும் வசீகரித்தவர்கள் மிக மிக சிலர்தான். ஷோபா எப்படி ஒரு புயல் போல வந்து தென்றல் போல திரை ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்று வரை தவழ்ந்து கொண்டிருக்கிறாரோ அதேபோலத்தான் சில்க் ஸ்மிதாவும். அவர் மரணமடைந்து இத்தனை காலமாகியும் கூட சில்க் ஸ்மிதாவின் புராணம் பாடாத ஆட்களே இருக்க முடியாது.


அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் வித்யா பாலனை வைத்து தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் எடுத்தனர். கொஞ்சம் கூட சில்க்கின் முகத்தையோ அவரது பாடி லாங்குவேஜையோ அவரது அழகையோ பிரதிபலிக்க முடியவில்லை வித்யா பாலனால். இதை அவரே கூட ஒப்புக் கொண்டார்தான். 




சமீபத்தில் கூட மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவின் தோற்றத்தில் உள்ளவரை ஒரு சீனில் தோன்ற வைத்து தியேட்டரையே கொந்தளிக்க வைத்தனர். அந்த அளவுக்கு சில்க் மீதான கிரேஸ் இன்னும் ஒரு பர்சன்ட் கூட குறையாமல் அப்படியே இருக்கிறது. இப்போது சில்க் ஸ்மிதா குறித்த இன்னும் ஒரு பயோபிக் வரப் போகிறது.  இதில் நடிக்கிறார் சந்திரிகா ரவி.


இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் போட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருபவர்தான் சந்திரிகா ரவி. ஆஸ்திரேலியா தமிழச்சி. அங்கு நடிகையா, மாடல் அழகியாக வலம் வருகிறார். இவரை வைத்து சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளது. இதில் சில்க் வேடத்தில் சந்திரிகா நடிக்கிறார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என்று ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு வரவுள்ளதாம் இந்தப் படம். இதன் பர்ஸ்ட் லுக் பட்டையைக் கிளப்பியுள்ளது. பார்க்க அப்படியே சில்க் ஸ்மிதா மாதிரியே இருக்கிறார் சந்திரிகா ரவி. சில்க்கைப் போலவே சந்திரிகாவும் மாநிறம்தான்.. மேலும் சில்க்கின் மிகப் பெரிய பிளஸ் பாயின்ட் ஆன கண்களும், உதடுகளும் அப்படியே சந்திரிகாவிடமும் இருக்கிறது. எனவே வேடப் பொருத்தம் பிரமாதமாக பொருந்திப் போயுள்ளது.


இதுகுறித்து சந்திரிகா ரவி போட்டுள்ள டிவீட்டில் காலத்தையும் மிஞ்சிய அழகியான சில்க் ஸ்மிதாவுக்கு எனது 63வது பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது குடும்பத்தினரின் ஆசியுடன், அவரது சொல்லப்படாத கதையை படமாக்கும் செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் சந்திரிகா ரவி.


இப்படத்தை ஜெயராம் சங்கரன் இயக்குகிறார். ஸ்வீட் காரம் காபி என்ற அமேசான் வெப் சீரிஸை இயக்கியவர் இவர்.  சந்திரிகாவுக்கு இது முதல் படம் அல்ல. இதற்கு முன்பு 2018ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் ஒரு பேயாக வந்திருப்பார். அதேபோல 2019ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிகடி காடிலோ சித்தகொடுத்து என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பெயர் வாங்கிக்க கொடுத்த படம் என்றால் அது என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்மா ரெட்டியில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதுதான். 


சில்க் ஸ்மிதா படத்தில் நடித்து முடித்த பிறகு சந்திரிகா ரவியின் பெயர் "சில்க் ரவி" என்று மாறினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.. பார்க்கலாம்!

சமீபத்திய செய்திகள்

news

May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!

news

Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

May 1: உலக உழைப்பாளர் தினம்.. முயற்சியே வெல்லும்!

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

news

Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்