சில்லென்ற பனியில் நனைந்த சென்னை மாநகரம்.. மினி ஊட்டி போல இருக்குங்கோ.. செம கூல்!

Jan 03, 2024,10:59 AM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவியது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவில்  பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் வாகனங்கள் அதிகாலை வெயில் வரும் வரை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்று கொண்டிருந்தன. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள், பொது இடங்களுக்கு செல்பவர்கள் என மக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஏற்படுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று இருக்கக்கூடிய நிலையில், சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடும் பனிப்பொழிவு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்கழி மாதம் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது .இதனால் இன்று காலை நான்கு மணியிலிருந்து தற்போது வரை பனியின் தாக்கம் குறையவில்லை. தற்போது உதகையிலும் உறைபனி நிலவுகிறது.



சென்னையை பொறுத்தளவில், அதிக பனிப்பொழிவு நிலவுவதால் ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்