சென்னை: மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு ஒரு புதிய கெளரவத்தை அளித்துள்ளது சென்னை கமலா தியேட்டர்.
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் நினைவாக, நாயகன் படத்தின் மறுவெளியீட்டின் முதல் டிக்கெட் அவருக்கு ஒதுக்கப்படும் என சென்னை கமலா தியேட்டர் அறிவித்துள்ளது. நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது கமல்ஹாசன் நடித்த நாயகன் படம்.
எப்போதுமே கமலா தியேட்டரில் கமல் படங்கள் வெளியானால், முதல் காட்சியை ரோபோ சங்கர் எப்போதும் முதல் ஆளாக வந்து கொண்டாடுவார். தீவிர கமல் ரசிகரும் கூட. இதனால்தான் அவரது மறைவைத் தொடர்ந்து அவருக்கு கமலா தியேட்டர் நிர்வாகம் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

கமலா தியேட்டரின் இயக்குநர் தனது X பக்கத்தில், "ரோபோ சங்கர் இல்லாமல் கமல்ஹாசனின் படங்களின் கொண்டாட்டங்கள் இனி ஒருபோதும் ஒன்றாக இருக்காது. பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன், முதல் டிக்கெட் ரோபோ சங்கரின் நினைவாகவும், அடுத்த சில டிக்கெட்டுகள் அவரது குடும்பத்தினருக்காகவும் ஒதுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 18 அன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், 46 வயதில் காலமானார். அவருக்கு மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா மற்றும் ஒரு பேரன் உள்ளனர்.
ரோபோ சங்கரின் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று மரியாதை செலுத்தியிருந்தார். மேலும் அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ரோபோ சங்கர். ரோபோ என்பது உங்கள் புனைப்பெயர், ஆனால் என் அகராதியில் நீங்கள் ஒரு மனிதர். அதனால்தான் நீங்கள் என் இளைய சகோதரன். உங்கள் மறைவு நம்மைப் பிரிக்குமா? உங்கள் நேரம் வந்துவிட்டது, அதனால் நீங்கள் சென்றீர்கள். ஆனால் என் நேரம் வரவில்லை, அதனால் நான் இருக்கிறேன். நாளை நமக்கே உரியது, ஏனென்றால் நீங்கள் நாளை நமக்காக விட்டுச் சென்றீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
நாயகன் திரைப்படம், கமல்ஹாசன், ஜனகராஜ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம். இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிப்பு, இசை, இயக்கம், கேமரா என பல்வேறு காரணங்களுக்காக இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இது பெற்றுக் கொடுத்தது நினைவிருக்கலாம்.
கணவன் மனைவி – கதையும் மனையும் !
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்
துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!
அபாயகரமான ஆயுதத்தைக் கையில் எடுத்த நிர்மலா சிஸ்டர் (சீதா 3)
நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!
ஐப்பசி மாத பெளர்ணமி.. சகல சிவாலய அன்னாபிஷேகம்.. சிவாலயங்களில் விசேஷம்!
30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்
{{comments.comment}}