சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கும் பரவலாக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்த நிலையில், சென்னை முழுவதும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இன்று காலை மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையில் விட்டு விட்டு கன மழை
குறிப்பாக தென் சென்னை, வடசென்னை,மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது .இதே மழை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தொடரும் எனவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது, பருவமழை காலத்தில் மழைப்பொழிவு என்பது இயற்கையான நிகழ்வு என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மழையால் ஏற்படும் பாதிப்பு என்பது அந்தந்த பகுதிகளின் ஏற்படும் கட்டமைப்பை பொறுத்ததே.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். இதன் பின்னர் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டை நோக்கி நகரும். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மெதுவாக நகர்கிறது.
டெல்டா மாவட்டங்கள்
24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும். நாளை 16 ஆம் தேதி வடகடலோர மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும். நாளை வடக்கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளார்.
இன்று கனமழை:
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை அதி கனமழை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மிக கனமழை:
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை,ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,திருச்சி, புதுக்கோட்டை ,ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (17.10. 2024) மிக கனமழை:
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 17ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கனமழை:
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு, சேலம், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}