குவஹாத்தி: கவுகாத்தியில் உள்ள பர்சப்பாரா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படு மோசமான தொடக்கத்தைக் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது.
சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான முன்னாள் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. உலகக் கோப்பை டி 20 தொடரில் அட்டகாசமாக ஆடி கலக்கினார் சஞ்சு. இதனால் இன்றைய போட்டியிலும் அவரது ரன் வேட்டை தொடரும் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால் சஞ்சு ஏமாற்றி விட்டார்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் 6 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். தொடர்ந்து ஆயுஷும் அவுட்டாகி 4 ஓவர்களுக்குள் சென்னை அணி 3 விக்கெட்டுகளைப் பறி கொடுத்து தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.
நந்த்ரே பர்கர் அதிரடியாக பந்து வீசி 2 விக்கெட்களைச் சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.
தோனி ஆடவில்லை: காயம் காரணமாக எம்.எஸ்.தோனி இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் மற்றும் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார்.
நீண்ட காலம் சிஎஸ்கே-வில் இருந்த ரவீந்திர ஜடேஜா இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், ராஜஸ்தான் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-விற்காகவும் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் ஆடும் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, மேட் ஷார்ட், சிவம் துபே, கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மேட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மயர், ரவீந்திர ஜடேஜா, ஜோப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், சந்தீப் சர்மா, ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் சர்மா.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}