Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!

Mar 30, 2026,08:11 PM IST

சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஒரு புதிய வரலாற்றை எழுதியுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில், எம்.எஸ்.தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவருமே இல்லாமல் சிஎஸ்கே களமிறங்கிய முதல் போட்டியாக குவஹாத்தி போட்டி அமைந்துள்ளது.


இதுவரை ஆடிய சிஎஸ்கே போட்டிகளில் தோனி அல்லது ரெய்னா ஆகியோரில் யாராவது ஒருவர் இருந்து வந்தனர். சுரேஷ் ரெய்னா போன பிறகும் கூட இது தொடர்ந்து வந்தது. ஆனால் இன்றைய போட்டியில் தோனியும் இடம் பெறவில்லை.


சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 277 டி20 போட்டிகளில் அதாவது ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் சேர்த்து, குறைந்தது தோனி அல்லது ரெய்னா ஆகிய இருவரில் ஒருவர் நிச்சயமாக ஆடும் லெவனில் இடம் பெற்றிருப்பார்கள். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த நீண்ட கால பாரம்பரியம் முடிவுக்கு வந்துள்ளது.




தோனி ஏன் விளையாடவில்லை?


தோனிக்கு பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், இந்த சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுரேஷ் ரெய்னா ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தோனியின் இந்த காயம் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.


ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்த, தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பொறுப்பை ராஜஸ்தான் அணியில் இருந்து மாற்றப்பட்ட சஞ்சு சாம்சன் ஏற்றுள்ளார்.


குவஹாத்தியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தோனி இல்லாத நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளே ஓவர்களிலேயே சிஎஸ்கே தடுமாறியது.


தற்போது சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அணியை மீட்கப் போராடி வருகிறார். 'தல' மற்றும் 'சின்ன தல' இல்லாத சிஎஸ்கே அணியை முதன்முதலாகப் பார்ப்பது ரசிகர்களுக்கு ஒரு விசித்திரமான உணர்வைத் தந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்