சென்னை: டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
டெல்லி சாணக்யாபுரியில் உள்ள வைகை இல்ல வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அடிக்கல் நாட்டு விழாவில் நெடுஞ்சாலைத் துறை தொடர்பான புத்தங்களையும் முதல்வர் வெளியிட்டார். இதுக்குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று 26/07/2024 தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 18/06/2021 அன்று முதலமைச்சர் தலை மையில் புது டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புது டெல்லியில் மிகத் தீவிர நில அதிர்வு மண்டலம் நான்காக மறு வகைப்படுத்தப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன. புதிதாக கட்டப்பட உள்ள இக்கட்டிடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய துறை நுட்பக் கழகம், சென்னை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறையால் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தை மறு சீரமைத்து புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு ரூபாய் 257 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாணயக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்திற்கான மறு மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களின் விவரங்கள் இப்புதிய கட்டிடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்பு தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்கட்டிடம் மூன்று அடித்தளம், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களை கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சத்து சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை,39 முக்கிய பிரமுகர் அறைகள், 60 உயர்தர அறைகள், 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம், பல்நோக்கு அரங்கம், மூன்று உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நூலகம் மற்றும் பல்வேறு வசதிகளும் இப்புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர்.எ.வ. வேலு, தலைமைச் செயலாளர்.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.மங்கத் ராம் சர்மா பொதுத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொளி காட்சி வாயிலாக புது டெல்லியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆர். ராசா, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சு.வெங்கடேசன், துரை வைகோ, வை. செல்வராஜ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}