சென்னை: உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாடுமுழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கொண்டாடப்பட்டு வரும் குழந்தைகள் தினம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி,
பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய்,
வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் காலை உணவுத்திட்டம்,
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்,
உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்,
ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் எனது
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவமும் , ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்; அந்தக் கனவுகளை நிறைவேற்ற
முயற்சி, சக்தி, துணிவு மூன்றும்
துணை நிற்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- குழந்தைகள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் குழந்தைகளின் மகிழ்ச்சி, கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சீறிய முயற்சியால் குழந்தைச் செல்வங்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான், செல்ல மகளை செல்வ மகள்களாக மாற்றும், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான வருங்கால வைப்புநிதி திட்டம். நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல், நாட்டின் வருங்காலமான குழந்தைகளின் நலனுக்காகவும் பாரதப் பிரதமர் பாடுபட்டு வருகிறார்.
நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம்.
குழந்தை செல்வங்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எனது இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், தேசத்தின் எதிர்கால நம்பிக்கையான குழந்தைச் செல்வங்கள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகள் அனைவருக்கும், சிறப்பான கல்வி, ஆரோக்கியம், மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்கள், பல்வேறு துறைகளில் சாதனை செய்து தேசத்தைப் பெருமைப்படுத்த, பெற்றோர்களும், சமூகமும் உறுதுணையாய் இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தையின் மொழி .. சொல்லுக்கு முன் பிறக்கும் இசை!
சிறிய புன்னகையில் பெரிய உலகம் கொண்டாடும் நாள்!
குழந்தைகள்.. இறைவன் கொடுத்த பொக்கிஷங்கள்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
குழந்தைகள்.. சிரிப்பிலே தேன்சிட்டு.. சிந்தனையிலோ மணி மொட்டு!
நிலையற்ற விலையில் தங்கம் விலை... நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைந்தது!
பிஞ்சுகள்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
{{comments.comment}}