பெய்ஜிங்: தனது முகத்தை வட்டமிட்டு தொந்தரவு செய்த பூச்சி கடித்து, பார்வையை இழந்துள்ளார் சீனாவை சேர்ந்த வூ என்ற இளைஞர்.
மனித உடல் உறுப்புகளில் முக்கியமானது கண். நாம் கண்டு ரசிப்பதற்காக அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண். நமது கண் ஒரு நிழல்படக் கருவியைப் போன்று இயங்குகிறது. கண்ணின் உதவியுடன் தான் உலகில் உள்ள அனைத்தையும் நாம் பார்த்து ரசிக்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கண் ஒரு பூச்சியால் பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அதை யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே ஈ படத்தால் நம்ம சுதீப் பட்ட கஷ்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட அதேபோல ஒரு கஷ்டத்தை சீனாவைச் சேர்ந்த ஒருவர் சந்தித்து உச்சகட்டமாக கண் பார்வையையும் இழந்துள்ளார். நாமக்கெல்லாம் கொசு கடித்தால் என்ன செய்வோம். அது கடித்த இடத்திலேலே வைத்து அடிப்போம். அப்படி தான் சீனாவை சேர்ந்த இளைஞரும் செய்தார்.. ஆனால் கண் பார்வை போய் விட்டது.. பூச்சியை அடித்தால் எப்படி கண் பார்வை போகும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. வாங்க பார்ப்போம்.
சீனாவை சேர்ந்த வூ என்ற இளைஞர். சம்பவத்தன்று இவரது முகத்தை ஒரு பூச்சி சுற்றிச் சுற்றி வந்துள்ளது. விரட்டிப் பார்த்தும் அது போகவில்லை. கடுப்பான அவர் ஓங்கி பலமாக பூச்சியை அடித்துள்ளார். ஆனால் அதற்குள் அந்தப் பூச்சி அவரது கண்ணில் கடித்து விட்டது. இதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. சாதாரண வீக்கம் என்று அவர் அசால்டாக விட்டு விட்டார். சிறிது நேரத்திலேயே இடது கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் வலி அதிகரித்து கண் பார்வை குறைய ஆரம்பித்துள்ளது. பதறி அடித்து கொண்டு மருத்துவமனை சென்ற இளைஞருக்கு, மருத்துவர் கண் பரிசோதனை செய்து பார்த்தனர். கண் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்கள் இதே நிலை தொடர்ந்தால், இது மூளையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மூளை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவரின் கண்விழியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர் மருத்துவர்கள். இவரை கடித்த பூச்சி Drain fly என்பது கண்டறியப்பட்டுள்ளது. மனிதனுக்கு எப்படியெல்லாம் கஷ்டம் வருகிறது என்று பாருங்கள்.
தமிழ்நாட்டில் தொடரும் கனமழை... இன்று முதல் ஆக., 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது : முதல்வர் முக ஸ்டாலின்!
தேர்தலில் தோற்று செத்து சாம்பலானாலும் நடக்காது... நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டம்
ஆகஸ்ட் 15 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
நியாயமான தேர்தல் உறுதி செய்யப்பட வேண்டும்.. ராகுல்காந்தி கைதுக்கு விஜய் கண்டனம்!
உலகத்தின் பாதியை அழிப்போம்.. அமெரிக்காவிலிருந்து மிரட்டல் விடுத்த.. பாக். ராணுவ தளபதி
செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
பச்சைக் கொண்டைக் கடலை.. செம சத்து.. ஹெல்த்துல கெத்து.. எப்படி சாப்பிடணும் தெரியுமா?
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... சவரனுக்கும் எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}