- மஞ்சுளா தேவி
சென்னை: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ராஜ்குமாரின் திருமணத்தை முதல்வர் மு .க ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் யாராலும் மறக்க முடியாத படம். விஜய் சேதுபதி என்ற சூப்பர் பெர்பார்மரை பளிச்சென அடையாளம் காட்டிய படம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக வந்தவர்தான் ராஜ்குமார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, விக்னேஸ்வரன், பழனிச்சாமி, பகவதி பெருமாள் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திரு்தநர். இப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜ்குமார், விக்னேஸ்வரன், பகவதி ஆகியோர் தங்களின் முதல் படத்திலேயே பிரபலம் ஆனார்கள்.

குறிப்பாக ராஜ்குமார், வணக்கம் சென்னை, நவீன சரஸ்வதி, என்.ஜி.கே, துக்ளக் தர்பார், விருமன், விக்ரம் வேதா என அடுத்தடுத்து நிறையப் படங்களில் நடித்தார். ராஜ்குமாரின் சொந்த ஊர் மதுரை திருமங்கலம். திமுக பிரமுகர் கோபாலனின் மகன்தான் ராஜ்குமார். அவருக்கும் கோவையைச் சேர்ந்த சாஜிக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது கல்யாணம் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திருமங்கலம் கோபாலின் திருமணத்தை தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரது மூன்று பிள்ளைகளின் திருமணத்தையும் தலைவரே தலைமையேற்று நடத்தினார். நான்காவது மகனான ராஜ்குமாரின் திருமணம் என் தலைமையில் நடைபெறுகிறது. இனி அவரது வாரிசுகளுக்கு பேரனோ.. பேத்தியோ.. அவர்களுக்கும் என் தலைமையில் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அந்த அளவிற்கு நாங்கள் உரிமை பெற்றவர்கள். அந்த அளவிற்கு எங்கள் மீதும் கழகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் திருமங்கலம் கோபால் குடும்பத்தினர். திருமங்கலம் கோபால் கட்சிக்காக பாடுபட்டு அரும் தொண்டாற்றியவர். அவர் எப்போதும் மிடுக்காகவே இருப்பார்.

தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் திமுகவின் துணை அமைப்பாக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது .. ஏறத்தாழ 30 சதவீத அளவிற்கு எனக்கு பாதுகாப்பாக என்னுடன் பயணித்தவர் தான் திருமங்கலம் கோபால் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
திருமணத்தில் திரைப் பிரபலங்கள், திமுகவினர், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}