சென்னை: வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மும்மொழிக் கொள்கையை வைத்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக கட்சியினருக்கு சவால் விடுகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதற்காக தமிழக அரசும் பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. மாணவரணி சார்பில் போராட்டம், கையெழுத்து இயக்கம், பெயர் பலகையில் இருக்கும் இந்தி வாக்கியங்களை அழிப்பது என பல்வேறு வகையில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசு தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளும் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே பாஜகவினர் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் நான் இருமொழி கொள்கை தான் என்று சொன்னேன். பாஜகவினர் வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சிகளிலிருந்து நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பள்ளி மாணவர்களை மும்மொழிக் கல்வி கொள்கைக்கு ஆதரவு அளிக்க கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி வருவதாகவும்க கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பாஜக தமிழ்நாட்டில் மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்து பிரசாரம் நடத்துவது நகைப்புக்குரிய விஷயமாகிவிட்டது. இதை பிரதான வாக்குறுதியாக வைத்து 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளுமாறு அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். அதுவே ஹிந்தி திணிப்புக்கு எதிரான பொது வாக்கெடுப்பாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
Short Story: வாழ நினைத்தால் வாழலாம்!
தங்க ஆரம் பூண்ட வெள்ளித் தாலம் உதய சூரியன்!
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
{{comments.comment}}