காங்கிரஸ் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரம்.. காமராஜர் மிஸ்ஸிங்.. தலைவர்கள் அப்செட்!

Feb 26, 2023,03:42 PM IST
சென்னை: சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாட்டையொட்டி காங்கிரஸ் தலைமை வெளியிட்ட நாளிதழ் விளம்பரம் தமிழ்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநாட்டுக்கு இன்றுதான் கடைசி நாள். இதையொட்டி  ஒரு முழுப்பக்க அளவிலான விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் காங்கிரஸ் கட்சி கொடுத்திருந்தது.



இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக விசுவாசமாக பாடுபட்ட மூத்த தலைவர்கள் பலரது படங்கள் அதில் இடம் பெறவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே கூட  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விளம்பரம் குறித்த தனது அதிருப்தியை மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ரெய்ப்பூரில் நடக்கும் மாநாட்டிற்கு  முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னோடி தலைவர்கள் மவுலானா அபுல் கலாம் ஆசாத், பெருந்தலைவர் காமராஜர், பாபு ஜெகஜீவன் ராம் படங்கள் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது.




சுதந்திர போருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இஸ்லாமிய தலைவர்களின்  பங்களிப்பை நாமாவது அங்கீகரிக்க வேண்டும். பெருந்தலைவர் இரண்டு பிரதமர்களை அடையாளம் கண்டு காங்கிரஸை காத்தவர். அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர். பாபு ஜெகஜீவன் ராம் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர் என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் இப்படி அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட க ட்சியினர், காங்கிரஸைக் கிண்டலடித்து வருகின்றனர். பெருந்தலைவர் காமராஜரையே மறந்து விட்ட காங்கிரஸ், தமிழ்நாட்டில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வலம் வருகிறது என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

வாழ்த்து மழையில் நனையும்‌.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

news

தங்கத்தின் விலை சற்று குறைவு.. முகூர்த்த நாள் என்பதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி..!

news

வேலூரில் இன்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

மே தினம்.‌‌... உழைக்கும் கரங்களுக்கு.. நன்றி அர்ப்பணிக்கும் ஞானம் விதைக்கும் நாளாகட்டும்...!

news

மே 1.. தொழிலாளர்களின் உழைப்பின்றி சமூக மேம்பாடு சாத்தியம் இல்லை!

news

BREAKING: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன்.. சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த முடிவு!

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பிரதமர் மோடியின் ரஷ்யா சுற்றுப்பயணம் ரத்து!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

news

தவெகவில் self discipline.. 100% முக்கியம்.. ஸ்ட்ரிக்டா பாலோ செய்யனும் ஃபிரண்ட்ஸ்..விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்