12 ஹெலிகாப்டர்கள் ரெடி.. "எம்எல்ஏ"க்களை பாதுகாக்கும் கர்நாடக காங்.. கூவத்தூர் வருவார்களா?

May 13, 2023,11:46 AM IST

டெல்லி:  கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளபோதிலும் கூட பாஜகவும் 70 இடங்களுக்கு மேல் வெல்கிறது. இதனால் கட்சி தாவல் நடவடிக்கைகள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது போன்றவற்றுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக இதைத்தான் செய்தது. மகாராஷ்டிராவிலும் அப்படித்தான் சிவசேனாவைக் காலி செய்தது. ஏன் கர்நாடகத்திலும் கூட பாஜக அரசு உருவானதே இப்படித்தான். எனவே இந்த முறையும் குதிரை பேரம் நடக்க வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் அஞ்சுகிறது.



இதனால் வெற்றி பெறும் தனது வேட்பாளர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. வெற்றி பெறுவோர் உடனடியாக பெங்களூருக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். அவர்களை பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட் அதில் ஒன்று. மேலும் 2 ஹோட்டல்களையும் காங்கிரஸ் முடிவு செய்து வைத்துள்ளதாம்.

அதேபோல தமிழ்நாட்டிலும் பாதுகாப்பான முறையில் தனது வேட்பாளர்களைத் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டு இங்கும் பேசி வருகிறது. ஒரு எம்எல்ஏவைக் கூட பறி கொடுத்து விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் மிகவும் கவனமாக உள்ளதாக தெரிகிறது. பெங்களூரில் 12 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வருகிறது. அதன் மூலம் வேட்பாளர்களை பத்திரமான இடங்களுக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாம்.

கூவத்தூர் வருவார்களா

ஒருவேளை தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டால் எங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அவர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதுதான் தமிழ்நாட்டிலேயே மிகவும் ராசியான ரிசார்ட்டாகும். அங்குதான் சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சில நாட்கள் முகாமிட்டிருந்தார்.

அங்கு தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமிதான் பின்னர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய வரலாறு படைத்தார் என்பதை அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. எனவே அந்த ராசிக்காக கூவத்தூர் ரிசார்ட்டுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடும் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

news

மணாளனின் மாண்புகள்!

news

Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..

அதிகம் பார்க்கும் செய்திகள்