Constantine Poems: அன்புக் கடவுளே.. உனக்கு ஒரு யோசனை!

Apr 06, 2026,11:17 AM IST

கடவுளுக்கு ஒரு யோசனை!



- கான்ஸ்டன்டைன். இ


தாயாய் மாறும் பெண்ணுக்கு  

சாகா  வரம்  - ஏன் 

அவளுக்கு  தரவில்லை!


நினைக்கின்ற  பொழுதெல்லாம் 

வந்து வந்து ஒரு நிமிடம்  

எனை அணைத்து 

இருப்பாளே!


--


பிப்ரவரி குறைபிரசவம்! 


ஏ பிப்ரவரியே!

உனக்கு மட்டும் ஏன் 

28 நாட்கள்?




உன் குறை பிரசவம் 

என் வயதை 

கூட்டி விடுகின்றதே...


அன்புக்கு ஒரு நாள் கொடுத்தாய்! 

காதலிப்போர் தினம் 

ஆக்கினாய் ...


தேடினேன் கிடைக்கவில்லை 

என் பிறந்த நாள் காணவில்லை 

வாழ்த்து சொல்ல யாரும் இல்லை 


உன் குறைப்பிரசவம் 

குறையலே.....

நாலாண்டுக்கு ஓர்முறை 

4 வயது கூடுகிறதே!


பிறந்த தேதி 

பிப்ரவரி 29……


--


திரை கடல் ஓடி


திரை கடல் ஓடி திரவியம் தேடு

ஔவையார் கூற்று!


கடந்தேன் கடலை  

தேடியது திரவியம் அல்ல! 


என் வாழ்வை, என் உயிரை 

கையிருக்க பற்றிக்கொண்டு  

தோனி ஏறி பதைபதைக்க! 


நீல கடல் எனை மிரட்ட

உப்புக்காற்று தோலுரிய  

கரை சேர்த்தேன்

குடும்பமாய்!


மொழி தெரியா மண்ணிலே 

என்குடும்பம், சிறுபிள்ளைகள் 

மீண்டும் வாழ வரமாய்!


வெளிநாடு வாழ் தமிழா

வாழ பழகு ஒன்று சேர்ந்து!


வெளி நாடு வாழ் இந்தியர்கள்!


--


நிலா!


கரு நீல வானம் 

நான் நடந்தேன் 

மாலையில்!


வழி தெரியா கண் இருட்ட 

என்னையே நான் தேட 

யாராவது வரமாட்டாரா 

அவர் கைபிடித்து உடன் நடக்க! 


தயக்கம் பயம் தனிமை 

செல்லும் இடம்கூட 

நான் மறந்து போனேனே!


எங்கோ ஒரு சத்தம் 

விட்டில் பூச்சி வெளிச்சம் 


இதய துடிப்பு படபடக்க 

தொலைந்து போவேனோ 

மிரட்சியில் என் கண்கள்!


எட்டிப்பார்த்தாள்

என்ன பளபளப்பு 

ஒளிகொண்ட அவள் முகம்


யார் நீ, கேட்டேன்?

மவுனமாக பெயர் சொன்னால் 

என் பெயர் 

"நிலா"!


(கான்ஸ்டன்டைன். இ, மிலன் நகரம், இத்தாலி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்