சென்னை: பள்ளி திறப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
2025-26ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படாது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் திட்டமிட்டபடியே தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்படும் என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
அதே சமயத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை செய்திருப்பதை உறுதி செய்தல், மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள், போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து காணொளி வாயிலாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர்கள்,துறை சார்ந்த இயக்குனர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கலந்துரையாடி, சில ஆலோசனைகளை வழங்கினார்.அதில்,
பள்ளிகள் திறக்கப்பட்ட ஜூன் இரண்டாம் தேதி அன்றே மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப்பை, உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளதா..?என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும்.
இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வரவேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத சிலர், கல்வி சான்றிதழை வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளி நிறுவனங்களுடன் பேசி மாணவர்களின் கல்வி சான்றிதழை உடனடியாக பெற்றுக்கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}