- மஞ்சுளா தேவி
லண்டன்: அமெரிக்காவில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை ஒலிம்பிக் கவுன்சில் ஏற்றால் 128 வருடத்திற்குப் பிறகு கிரிக்கெட் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம் பெறும்.
ஒலிம்பிக் என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச விளையாட்டு நிகழ்வாகும். ஒலிம்பிக் போட்டி முதல் முறையாக 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. ஒலிம்பிக் கொடியை பியரி டெ கூபர்டின் என்பவர் வடிவமைத்தார். இந்த கொடி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி ஐந்து வளையங்களை கொண்டதாக அமைந்திருக்கும்.
இந்த ஐந்து வளையங்கள் ஒவ்வொன்றும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ,ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களை பிரதிபலிக்கின்றன. இந்த வளையத்தில் உள்ள ஐந்து நிறங்களும் ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடியில் உள்ள நிறத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும்.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற போற்றியாளர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்கள் பரிசாக வழங்கப்படும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது, உலக அளவில் மிகப் பெரிய கெளரவமாக பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆவார்.
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 1900 ஆம் ஆண்டு நடந்த பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெறவில்லை. நீண்ட வருடங்களுக்குப் பின்பு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்தள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனெனில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு பெரும் பங்கு வகிக்கின்றது. கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர், மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது நினைவிருக்கலாம். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் அதிலும் இந்தியாவுக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்.
வருகின்ற 15ஆம் தேதி 141வது சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது .இந்த கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் 20 ஓவருக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இடம் பெறும் என்று தெரிகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}