டெல்லி: கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் என்ற அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் எழுந்துள்ள பரபரப்புக்கு மத்தியில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காஷ்மீர் அரசு தலா 10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்காக பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்.பியுமான கௌதம் கம்பீர் பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதற்கு காரணமானவர்கள் விலை கொடுப்பார்கள். இந்தியா தாக்கும் என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டர் கௌதம் கம்பீர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல் நிலையத்தை நாடியுள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது.
அதில், நாங்கள் உன்னை கொல்லப் போகிறோம் என பதிவிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, FIR பதிவு செய்யுமாறும் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஈராக்கை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஸ்டேட் என்ற தீவிரவாத பிரிவு தான் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கிளை காஷ்மீர் பிரிவிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கம்பீருக்கு செவ்வாய்க்கிழமை கொலை மிரட்டல் வந்துள்ளது. முன்னதாக அதே செவ்வாய்க்கிழமையில் தான் பஹல்காம் தாக்குதலை கண்டித்து ட்விட்டர் பதிவு போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}