பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!

Sep 21, 2026,11:15 AM IST

தேவகோட்டை: பாஸ்போர்ட் எடுப்பது குறித்து தேவகோட்டை தபால் அலுவலகத்தில் மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் தேவகோட்டை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.


அஞ்சல்துறையின் தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி வீரபாண்டியன் மாணவர்களை வரவேற்றார். தொடர்ந்து, பாஸ்போர்ட் அலுவலர்கள் ஷர்மிளா மற்றும் நாகதேவி ஆகியோர் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நடைமுறை, தேவையான ஆவணங்கள், முகவரி மற்றும் பிறந்த தேதி சரிபார்ப்பு உள்ளிட்ட அலுவலக செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கினர்.




மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். நிறைவாக ஆசிரியை சிவரஞ்சனி நன்றி கூறினார். களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியை ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் வெறும் போதனை மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு இதுபோன்ற வாழ்க்கையின் அத்தியாவசியமான பணிகள்  சேவைகள் குறித்தும் அவ்வப்போது விளக்கிக் கற்றுத் தரப்படுகிறது. வங்கிகளில் சலான் பூர்த்தி செய்வது, கணக்கு தொடங்குவது உள்ளிட்டவை குறித்தும் தொடர்ச்சியாக மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Folk song by PS Murugesan: பட்டிக் காட்டு மாமன் என்னை கட்டிக் கொள்ள வா புள்ளே!

news

பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!

news

தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?

news

இந்தக் காதலை மட்டும்...கட்டுப்படுத்த முடியலையே!

news

உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்