அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி.. பெற்றோர்களின் பாராட்டை பெற்ற பள்ளி..!

May 03, 2025,10:37 AM IST

சிவகங்கை:  தமிழக அரசின் மதிய சத்துணவு  திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

                     

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி, மாணவர்கள் சமூக உணர்வுகளை மதிக்கும் நோக்கிலும், உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி, எழுத்துப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி போன்றவையும் நடத்தப்பட்டு வருகிறது. 




அதே போல் உலக புத்தக தினம், பூஜ்ய நிழல் தினம், தேசிய நூலக தினம், உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்கள் தகவல்களைப் பெறவும் வழிவகை செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் அரசு வழங்கி வரும் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு சென்று சேரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளையும் தேவகோட்டை பள்ளி செய்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மீதான அக்கறையில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பள்ளியில்  சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது,   


எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின்  பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல்தான் வருகிறார்கள்.


இதனால் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய சத்துணவை விரும்பி சாப்பிடுவார்கள் .எனவே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பள்ளியிலேயே சாப்பிடும் வைக்கும் வகையில் புதிய முயற்சிகள் எடுத்து உள்ளோம்.




ஒவ்வொரு மாணவரும் தூய்மையான  கைகுட்டையின்  மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு சாப்பிடுகிறார்கள்.


டவலில் சாப்பிட்டு சிந்தாமல் வீடுகளில் சாப்பிடும்போதும் மாணவர்கள் சுத்தமாக சாப்பிடுவதுடன் சாப்பிடும்  இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்வதாக பெற்றோர்கள் எங்களிடம் தெரிவித்து சந்தோசம் அடைந்தனர்.


எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல்  வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைக்கின்றனர் .இதன் மூலம்  மாணவர்களிடையே சகோதரத்துவம்வளருகிறது.


ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தங்கள் தட்டில் உள்ள முழுவதையும்  சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பித்து செல்ல வேண்டும்.


இதன் மூலம் மாணவர்களின் வீடுகளிலும் உணவினை வீணாக்காமல் மாணவர்கள் முழுவதுமாக சாப்பிட்டு விடுவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து செல்கின்றனர்.சில நாட்களில் இளம் மாணவர்கள் பெரிய வகுப்பு மாணவர்களை பார்த்து அவர்களாகவே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்.    ஒவ்வொரு   வாரமும் வெவ்வேறு நாள்களில் இரண்டு பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிட சொல்கிறோம்.




மதிய உணவு  எப்படி இருந்தது என்பதை மாணவர்களே என்னிடமும்,சத்துணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தாமாகவே வந்து சொல்கிறன்றனர்.


இது நிச்சயமாக தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில்   புதிய அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து பல  ஆண்டுகளாக நடைமுறைபடுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்