- அஸ்வின்
ஒரு நடிகரைப் பார்த்து ஹாலிவுட் வரை வியந்தது என்றால் அது தனுஷைப் பார்த்துதான். தனுஷ் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் கமர்ஷியல் ஃபார்முலாவை முதலில் பயன்படுத்தி வந்தார். அதன் பிறகு அனைவரையும் கவரும் கதைகளில் தொடர்ந்து நடித்தார். இடையில் சிறு சிறு சரிவுகளையும் அவ்வப்போது சந்தித்தார். அதன் பிறகு திறமையான இயக்குனர்களுன் கைகோர்த்து ஏகப்பட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.
தனுஷின் வளர்ச்சிப் பயணத்தில் செல்வராகவனுக்கு முக்கிய இடம் உண்டு. நல்ல குரு - சிஷ்யனுக்கு அடையாளமாக விளங்குபவர்கள் செல்வராகவனும் தனுஷும். துள்ளுவதோ இளமையில் அறிமுகமான தனுஷ் அதன் பிறகு ஒவ்வொரு படத்திலும் ஜெயிப்பதற்கு செல்வராகவன் ஒரு முக்கியமான காரணமாக இருந்துள்லார்.
புதுப்பேட்டை திரைப்படத்தில் செல்வராகவன் ஒரு வித்தியாசமான கதையை கையாண்டார். அந்த திரைப்படத்தில் வரும் கொக்கி குமார் கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தது. "என் பெயர் குமாரு கொக்கி குமாரு" என்று தனுஷ் சொல்லும் வசனம் அன்றைய இளைஞர்களின் அடைமொழி வசனமாக மாறிப்போனது. அதன் பிறகு குடும்ப ரசிகர்களை கவரும் படங்களில் அதிகமாக நடித்து வந்தார்.
வெற்றி மாறனுடன் தனுஷ் முதல்முறையாக கை கோர்த்த பொல்லாதவன் திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அவ்வப்போது சிறு சிறு சரிவை சந்தித்து வந்த தனுஷ், நடிப்பின் அடுத்த கட்டத்துக்கு சென்ற படம் ஆடுகளம். ஆடுகளத்தில் சேவல் சண்டையை மையப்படுத்தி வெற்றிமாறன் கதையை வடிவமைத்திருப்பார். ஒரு சேவலுக்காக இரண்டு கும்பல்களும் சண்டை இட்டுக் கொள்வது ஆடுகளத்தின் கதை ஆகும்.
ஆடுகளம் திரைப்படத்தில் சேவலுக்காக போராடும் ஒருவராக நடித்திருப்பார் தனுஷ். அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு ராஞ்சனா என்ற ஹிந்தி படத்தில் அவர் நடித்தார். அந்த படம் ஹிந்தியில் முதல்முறையாக தனுஷ் அறிமுகமான படம். அவருக்கு ஹிந்தியில் ஒரு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது ராஞ்சனா.
இப்பொழுது தனுஷ், அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கவர்ந்த ஒரு திரைப்படம் என்றால் வாத்தி. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கில் அவர் அறிமுகமான முதல் திரைப்படம் வாத்தி.
ஒரு நடிகர் எப்படி அனைத்து ரசிகர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை தனுஷிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுது அவரது புதிய படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதுதான் கேப்டன் மில்லர். சாணி காகிதம் திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்று இருக்கிறார்.
கேப்டன் மில்லர் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி அனைவரது எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டுள்ளது. பொங்கல் படங்களில் மிகவும் கவனம் ஈர்க்கும் படமாக இது இருக்கும். வாத்தி, கேப்டன் மில்லர் ஹாலிவுட் திரைப்படமான ஜர்னி ஆப் த ஃபக்கீர்.. இந்த திரைப்படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, கேப்டன் மில்லர் மூலம் தனுஷ் நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்று உறுதியாக நம்பலாம்.
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}