டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் - பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்.. குவிந்த திரை பிரபலங்கள்

Dec 15, 2023,01:19 PM IST
சென்னை : மார்க் ஆன்டனி படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் சிறிய ரோலிலும் இவர் நடித்து, நடிகராகவும் என்ட்ரி கொடுத்தார். இயக்குனர், நடிகர், எழுத்தாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் முதல் படத்திலேயே டைரக்டராக வெற்றி பெற்று, தமிழ் சினிமாவில் பிரபலமாகி விட்டார். அதற்கு பிறகு அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக இந்த ஆண்டு விஷால் நடித்த மார்க் ஆன்டனி படத்தையும் இயக்கினார். இந்த படத்தில் ஐ லவ் யூ டி என்ற பாடலையும் இவரே பாடி உள்ளார். 



ஆதிக், கே 13, நேர்கொண்ட பார்வை, கோப்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் போதே திரைக்கதை எழுத துவங்கி விட்டார் ஆதிக். கிட்டதட்ட 20 ஆண்டுகளாக அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய ஆதிக், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது முதல் படத்தை இயக்கினார். முதல் படம் கமர்சியல் ஹிட் என்றாலும், இரண்டாவதாக சிம்புவை வைத்து இவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படமும் சரி, கடைசியாக இயக்கிய மார்க் ஆன்டனி படமும் பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தது. 



அன்பானவன் படம் பெரும் தோல்விப்படமாக மாறிய நிலையில் மார்க் ஆண்டனி மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இதனால் ஆதிக்கின் இமேஜும் தற்போது உயர்ந்துள்ளது.



இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன், இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக பல நாட்களாகவே தகவல் பரவி வந்தது. சமீபத்தில் இவர்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இன்று சென்னையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், லெஜன்ட் சரவணன் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர். நடிகர் திலகம் வீட்டு திருமண விழாவில் தான் கலந்து கொள்வது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

news

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!

news

சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி

news

மனமாற்றம் வேண்டும்!!

news

போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்

news

இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!

news

தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்