- மஞ்சுளா தேவி
சென்னை: மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை. மனித நேயம் உள்ளவர்களை இந்தியனாக தான் பார்க்கிறார்கள் என பாய் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்ப பேரரசு பேசினார்.
பாய் என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் கமலநாதன் யுவன் எழுதி, இயக்கியுள்ளார். கே .ஆர். எஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ் ,ஸ்ரீநிதி மற்றும் ஆதவா ஈஸ்வரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய ,ஜித்தன் கே. ரோஷன் இசையமைத்துள்ளார்.
பாய் படத்தின் நாயகனாக ஆதவா ஈஸ்வரா மற்றும் நாயகியாக நிகிஷா நடித்துள்ளார். மதங்களை தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தும் கதை என்ற அறிமுகத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாய் பட டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாந்த் லேபில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு இயக்குநர் பேரரசு பேசும்போது கூறியதாவது:
முதலில் இந்தப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் துறைக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது அதற்காகப் பாராட்டுகிறேன்.
இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும். இஸ்லாமியர்களை நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் பழகுவோம்.எல்லாருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் இருப்பார். எங்கோ ஏதோ ஒரு இடத்தில் மதப் பிரச்சினை வந்தால் அதை அரசியலாக்கி விடுகிறார்கள். ஆனால் நாம் அப்படி நினைப்பதில்லை.
படத்தில் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் வருகிறது. மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல. மனிதாபிமானம் தான் மதம் .மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை. தீவிரவாதி என்றாலே அவன் எந்த மதமும் கிடையாது. அவன் மனித ஜாதியே கிடையாது .அவன் மிருகஜாதி. ஒரு குண்டு வைத்து 100 பேரைக் கொல்கிறான் என்றால் அவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது. இந்துவாக இருக்க முடியாது. வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க முடியாது.
அன்னை தெரசா கருணையின் உருவம். அவரை யாராவது ஒரு கிறிஸ்தவப் பெண்மணியாக பார்க்கிறோமா?
அப்துல்கலாமை யாராவது இஸ்லாமியராகப் பார்க்கிறோமா? அவரை மனிதநேயம் உள்ள இந்தியனாகத் தான் பார்க்கிறோம். கர்மவீரர் காமராஜர் இந்துவாக பிறந்தவர் தான். ஆனால் அவரை யாராவது இந்துவாகப் பார்க்கிறோமா? மனிதநேயம் உள்ள ஒரு சிறந்த ஆட்சியாளராகத்தான் பார்க்கிறோம்.
மக்கள் இன்று எல்லா பிரச்சினைகளையும் வெறும் செய்தியாகக் கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை.
ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா?. வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம் தான். மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம் தான். அப்படிப் பார்க்கும் போது பாய் மிகச் சிறந்த படம். இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள்.
இன்று குறைந்த முதலீட்டுப் படங்களும் நன்றாக இருந்தால் ஓடுகின்றன.நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு தந்து கொண்டாட வேண்டும் என்றார் பேரரசு.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}