"அந்நியன்" புதிய அவதாரம்.. ரீ ரிலீசாகும் ஷங்கரின் பிளாக்பஸ்டர் படம்

Aug 24, 2023,11:12 AM IST
சென்னை : பழைய படங்கள் பலவும் தற்போது புதிய டெக்னாலஜிக்கு மாற்றப்பட்டு, ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் டைரக்டர் ஷங்கர் இயக்கிய பிளாக் பஸ்டர் படம் ஒன்றும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன், ஐ இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இதில் குறிப்பாக அந்நியன் படத்தில் மல்டிபிள் பர்சனல் டிஸ்ஆர்டர் கொண்ட ஒரு நபரின் கேரக்டரில் விக்ரம் நடித்திருந்தார். விக்ரமின் நடிப்பில் வெளியான பெஸ்ட் படமாக இது கருதப்படுகிறது. 



ரூ.20 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்நியன் படம் 2005 ம் ஆண்டு ரிலீசானது. இந்த படம் ரூ.57 கோடிகளை வசூல் செய்ததுடன் பெஸ்ட் ஸ்பெஷல் எஃபெக்டிற்கான தேசிய விருதினையும் வென்றது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தற்போது அந்நியன் படத்தை, 4கே வெர்சனில் மாற்றி ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்கனவே துவங்கப்பட்டு, நடந்த வருகிறதாம். 

சமீபத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் 4கே வெர்சனுக்கு மாற்றப்பட்டு, ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதே போன்ற வரவேற்பை ரிலீசான 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்நியன் படமும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது டைரக்டர் ஷங்கர், கமலை வைத்து இந்தியன் 2, ராம் சரணை வைத்து கேம் சேஜ்சர் ஆகிய இரு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். மறுபுறம் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் சியான் 62 படத்தினாம் டைரக்டர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்