தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

Jul 30, 2026,04:58 PM IST

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக வெற்றிக் கழகப் (தவெக) அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நடைபெறவுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் முக்கிய தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


காவிரி உரிமையில் மெத்தனப்போக்கு :




இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே, மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், அதனைத் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் நதிநீர் உரிமையைப் பாதுகாப்பதில் தவெக அரசு தொடர்ந்து மெத்தனப்போக்குடனே செயல்பட்டு வருகிறது."


"பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என நினைத்துக் கொண்டு முதலமைச்சர் மௌனம் காக்கிறார். தேர்தல் நேரத்தில் சொன்னதைச் செய்ய எங்களுக்கு நேரம் வேண்டும் என்று கேட்ட முதலமைச்சர், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும் என்பதைப் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும்" என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு:


காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. "தமிழகத்தின் வாழ்வாதார உரிமையைப் மீட்டெடுக்கவும், விவசாயிகளின் குரலாக ஒலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும், விவசாய அமைப்பினரும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்" என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தஞ்சையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த போராட்டம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செப்.19-ல் திமுக முப்பெரும் விழா நடைபெறும்: கட்சி தலைமை அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: தவெக, திமுக வேட்புமனுக்கள் ஏற்பு

news

டிசம்பர் 15ம் தேதியோடு கிளம்பிருங்க.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அடிடாஸ்!

news

The Power of a Teacher

news

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

ஸ்கூல் போற குட்டீஸ் சரியா சாப்பிட மாட்டேங்குறாங்களா.. அட இதை செஞ்சு கொடுங்க!

news

விநாயகா! எனக்கென் குறை.. அழகிய சிங்கரின் என்பா!

news

மழை நின்ற பின்பும் தூறல் போல

அதிகம் பார்க்கும் செய்திகள்