ஆளுநர் ஆர். என். ரவி விவகாரம்.. குடியரசுத் தலைவரிடம் நாளை திமுக முறையீடு

Jan 11, 2023,09:23 AM IST
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர்  ஆர். என். ரவி. விவகாரம் தொடர்பாக திமுக குழு நாளை காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான முட்டல் மோதல் வலுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைத்த பல்வேறு மசோதாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரையின்போது நடந்த சம்பவங்கள் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம் பெற்ற சில பகுதிகளை ஆளுநர் ரவி படிக்காமல் விட்டது, முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து வெளியேறியது என அவரது செயல்கள் சர்ச்சையாகியுள்ளன. மேலும் தமிழ்நாடு என்ற அதிகாரப் பூர்வ பெயரை தனது பொங்கல் விழா அழைப்பிதழில் போடாமல் தமிழகம் என்று போட்டிருப்பதும் சர்ச்சையாகியுள்ளது.

இந்த நிலையில் ஆளுநர் ரவி குறித்து புகார் கூறுவதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திமுக குழு சந்திக்க டெல்லி வந்துள்ளது. திமுக எம்.பி டி.ஆர்.பாலு,  தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி, லோக்சபா எம்.பி ஏ. ராசா,ராஜ்யசபா எம்பிக்கள் என்ஆர் இளங்கோ, பி. வில்சன் ஆகியோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளது.

இன்று சந்திப்பதாக இருந்த நிலையில், நாளை முற்பகல் 11.45 மணிக்கு தமிழக எம்.பிக்கள் குழுவைச் சந்திக்க குடியரசுத் தலைவர் மாளிகை நேரம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து திமுக குழு நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஆளுநர் குறித்த குற்றச்சாட்டுக்களை வைத்து, அவரை அப்பொறுப்பிலிருந்து மாற்றக் கோரி திமுக வேண்டுகோள் விடுக்கும் என்று தெரிகிறது. 

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்