இந்த பூமிப் பந்து இருக்கே.. எத்தனை அழகானது தெரியுமா.. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அடடே இப்படியும் இருக்கா என்ற நாம் வியந்து போவதற்கு லட்சக்கணக்கான விஷயங்கள் இந்த பூமி முழுக்க பரவிக் கிடக்கிறது.
அப்படிப்பட்ட அழகான நாடுகளில் ஒன்றுதான் பிரேசில். தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிரேசில், எதற்குப் பிரபலம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால்பந்து ரசிகர்களால் நிரம்பிக் கிடக்கும் நாடுதான் பிரேசில். தென் அமெரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பெரியது பிரேசில்தான்.
பிரேசில் நாட்டைப் பொறுத்தவரை இங்கு போர்ச்சுகீசிய மொழிதான் அதிகாரப்பூர்வமான மொழி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களிலும் போர்ச்சுகீசிய மொழியை அதிகாரப்பூர்வமாக மொழியாக கொண்ட ஒரே நாடு பிரேசில்தான். பன்முகக் கலாச்சாரம் கொண்ட பிரேசிலில் டிப்பிக்கல் ஆன சில விஷயங்கள் உள்ளன. அதைத்தான் இப்ப பார்க்கப் போகிறோம்.
பில்டர் காபி
நம்ம ஊரில் அதாவது தமிழ்நாட்டில் பலரும் விரும்பிக் குடிப்பது இந்த பில்டர் காபிதான். பல வீடுகளில் இன்றும் கூட பில்டர் காபிதான். அதேபோலத்தான் பிரேசிலிலும் பில்டர் காபியைத்தான் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் குடிக்கிறார்கள். காபி மெஷின்களை பெரும்பாலோனோர் விரும்புவதே இல்லை. பில்டரில் போடும் காபியைத்தான் அப்படி விரும்பிக் குடிப்பார்களாம். அப்படிக் குடிச்சாதான் குடிச்சது போல இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
மேலும் பில்டர் காபியில்தான் காபியின் சுவையையும், நறுமணத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதாலும் பில்டர் காபிக்கே அங்குள்ளவர்கள் ஆதரவு அதிகம்.
வீட்டுக்கு வெளியே
நம்ம ஊரில் அந்தக் காலத்து வீடுகளில் முற்றம் என்று ஒன்று இருக்கும். வீட்டுக்கு நடுவே இந்த முற்றம் இருக்கும். அதே போல பிரேசில் வீடுகளிலும் முற்றம் இருக்கும். அப்படி இல்லாவிட்டால் வீட்டுக்கு முன்போ அல்லது பின்போ பெரிய வெற்றிடம் விட்டிருப்பார்கள். இரவில் பலரும் இந்த மாதிரியான ஓபன் பிளேசில்தான் தூங்க விரும்புவார்களாம். அதேபோல பகலில் இந்த இடத்தில்தான் வெயில் காய்கிறார்கள். உடலுக்கும் நல்லது, அதேசமயம், மனசுக்கும் ரிலாக்ஸ்டாக இருக்கும். இயற்கையுடன் இணைந்து வாழ்வது என்பதில் பிரேசில் காரர்கள் ரொம்ப ஆர்வமாக இருப்பவர்கள்.
ஆளுக்கு ஒரு பாட்டில் கிடையாது
பிரேசில் நாட்டில் பீர் குடிப்பது சர்வ சாதாரணமான விஷயம். அதேசமயம், தனித் தனியாக ஆளுக்கு ஒரு பாட்டிலுடன் அங்கு ஆட்களைப் பார்ப்பது கடினம். ஒரு பெரிய பாட்டிலை வாங்கி அதை நாலைந்து பேர் அல்லது பத்து பேர் வரை கூட ஷேர் செய்துதான் குடிப்பார்களாம்.
தனித் தனியாக குடிக்கும் கலாச்சாரமே அவர்களுக்குப் பிடிக்காதாம். எதுவாக இருந்தாலும் சேர்ந்துதான் குடிக்கிறார்கள். அதுதான் உறவையும், நட்பையும் பலப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அதேபோல வீக் என்ட் என்பது அந்த நாட்டில் புதன்கிழமையே ஆரம்பித்து விடுமாம். வழக்கமாக வெள்ளிக்கிழமைதான் வீக் என்ட் தொடங்கும். அன்று முதல் பார்ட்டிகளுக்கும் பலர் போக ஆரம்பிப்பார்கள். ஆனால் பிரேசிலில் இது புதன்கிழமையே ஆரம்பித்து விடுகிறது.
கூட்டுக் குடும்பங்கள்
பிரேசில் மக்கள் கூட்டுக் குடும்ப முறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். இணைந்து வாழ்வதை விரும்புபவர்கள். சேர்ந்தேதான் இருப்பார்கள். சேர்ந்தேதான் போவார்கள். அங்கு ஒவ்வொருவருக்கும் நிறைய நண்பர்கள், உறவுகள் இருக்கும். யாரும் தனித்து இருக்க மாட்டார்கள். நட்புக்கும், உறவுக்கும் அங்கு மரியாதை அதிகம்.
நீ வேற நான் வேற
இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும் கூட ஒரு கெட்ட விஷயமும் இருக்கிறது. அதாவது என்னதான் நீங்க அவர்களைப் போலவே வாழ்ந்தாலும், அவர்களது பாஷையை அவர்களை விட சிறப்பாக பேசினாலும் கூட நீங்க வெளிநாட்டுக்காரராக இருந்தால் அவர்கள் உங்களை வந்தேறியாக மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களிலிருந்து உங்களை தனித்து பிரித்துதான் பார்ப்பார்களாம். மண்ணின் மைந்தர்களை மட்டும அவர்கள் நம்மவராக பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் நீங்க அந்நியன் என்றுதான் சொல்வார்கள், அதில் அவர்கள் தயக்கம் காட்டுவதில்லை.
அதனால் என்ன.. அவர்களது மண்ணை காக்க நினைப்பது, அதன் தனித்தன்மையை காக்க முற்படுவது அவர்களது உரிமைதான்.. ஆனால் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கே.. அதை எடுத்துக்குவோம்.
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}