டெல்லி : இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர எம்எல்ஏ.,க்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு குறித்த விபரத்தை ஜனநாயக சீரமைப்பு கழகமும், தேசிய தேர்தல் கண்காணிப்பு குழுவும் இணைந்து வெளியிட்டுள்ளன.
லேட்டஸ்ட் புள்ளி விபரத்தின் படி, இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர எம்எல்ஏ.,க்களின் பட்டியலில் கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சிவக்குமார் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1413 கோடி.
2வது மற்றும் 3 வது இடத்திலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் தான் உள்ளனர். இந்தியாவின் பணக்கார 20 எம்எல்ஏ.,க்களில் 12 பேர் காங்கிரஸ்காரர்கள் தானாம்.
28 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகளில் தற்போது பதவியில் உள்ள 4001 எம்எல்ஏ.,க்களின் சொத்து மதிப்புக்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இண்டஸ் தொகுதி எம்எல்ஏ.,வான நிர்மல் குமார் தாரா தான் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான எம்எல்ஏ,வாம். இவரிடம் வெறும் ரூ.1700 பணம்தான் இருக்கிறதாம்.
கர்நாடக எம்எல்ஏ.,க்களில் "ஏழை எம்எல்ஏ" வாக பாஜக.,வின்பகிரதி முருல்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும்.
டாப் 10 கோடீஸ்வர எம்எல்ஏ.,க்கள் :
1. சிவக்குமார் (காங்கிரஸ்) - கர்நாடகா - ரூ.1413 கோடி
2. புட்டசாமி கவுடா (சுயேட்சை) - கர்நாடகா - ரூ.1267 கோடி
3. பிரியா கிருஷ்ணா (காங்கிரஸ்) - கர்நாடகா - ரூ.1156 கோடி
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
பஹல்காம் தாக்குதல்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம்!
அக்ஷய திருதியை.. தங்கம் மட்டும்தானா.. இதெல்லாமும் கூட வாங்கலாம் மக்களே!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
{{comments.comment}}