சென்னை: . அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு நாளை மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. அரசின் தோல்விக்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது.
ஒரு மாநிலத்தில் கல்வித்துறை செழிக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 1.31%, அதாவது ரூ.46,767 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.

இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாது என்பது உண்மை தான். இத்தகைய சூழலில் அதற்குத் தேவையான நிதியை கவுரவமான, கண்ணியமான வழிகளில் திரட்ட வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தத்துக் கொடுப்பதும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நன்கொடைக்காக கையேந்த வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கையேந்த வைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
கணவரை மீட்ட கற்புக்கரசி நளாயினியின் கதை!
Short story: பிரார்த்தனை!
ஆறு பெருக்கெடுத்து ஆள வட்டம் போடுதடி!
Let us celebrate Erode day
{{comments.comment}}