வையத்தின் உயிர் நாடி மழை!

Jun 24, 2026,04:27 PM IST

- முனைவர் கோ. லதா


மழையின் வருகை மாநிலம் போற்றும்

அலையென  எழுந்து  அருளினை சொரியும்

கருமேகம் தன்னை கைகளில் ஏந்தும்

அருமழை தன்னை அகிலத்தில் ஊற்றும்


பசுமையின் தாய் பாரினை காக்கும்

நசியாது நீரை நதியென ஓடும் 

குளங்கள் நிறையும் குடிநீர் பெருகும்

வளங்கள் சுரக்கும் வையகம் தழைக்கும் 


மரமென வளர்த்தால் மழையது வரும்

திரும்பிடும் வெயில் தெளிவுறும் வாழ்வு 

சுற்றுச்சூழல் சீராய் சுடர்ந்திடும் இங்கே

பற்றற்று மண்ணை பாதுகாப்போமே




நீர்நிலைத் தூர்த்தால் நிலைக்குமோ மழை

ஆராய்ந்து பார்ப்போம் அறிவினை கொண்டு

காலநிலை மாற்றம் கண்ணினை உறுத்தும்

வேலென வெப்பம் வேரினை கொல்லும்


மழைநீர் சேர்த்தால் மாந்தர்க்கு வளம்

கழிவினை தடுத்தால் காப்பது பொறுப்பு

இழைத்திடும் குழிகள் இனிதே நிரப்பும்

விழைந்திடும் நெஞ்சில் விழிப்புணர் வேண்டும்


மழையென நின்று மனிதரை ஆளும்

நிலையினை மறந்தால் நிதமும் அழிவு

உலகின் உயிர்நாடி உயர்ந்திடும் மழை

நலமுடன் காத்திட நாளெல்லாம் வேண்டும்.


--


வாழ்வின் தேடல்.


பிறந்தோம் ஏனென்று பேதையும் கேட்கும்

மறைந்திடும் நாள்வரை மனிதன் தேடும்

உறவெனும் நிழலில் உள்ளதை தேடும்

பிறவியின் பயனை பித்தென தேடும்


நல்லவன் ஆகிட நாளெல்லாம் தேடும்

பொல்லாங்கு போக்கிட பொன்னென தேடும்

செல்வமுமோ கல்வியோ சேரவே தேடும்

இல்லறம் நல்லறம் என்றென தேடும்


தன்னையே தான்முதல் தாழ்ந்து தேடும்

முன்னின்று ஞானத்தை மூச்சென தேடும்

என்னிலும் நீயென்று இறைவனை தேடும்

பின்னின்று வாழ்வெல்லாம் பேரமைதி தேடும்


--


சர்வதேச மகளிர் தூதரக தினம்


ஜூன் இருபத்துநான்கு ஜொலிக்கும் பொன்னாள்  

மகளிர் தூதராய் மாநிலம் ஆள்வார்  

அமைதி தூதாய் அன்பை விதைப்பார்  

உலகை இணைக்கும் உயரிய பெண்ணே  


பேச்சால் போரை பேருக்கு தடுப்பார்  

நீதியை நாட்டி நல்லுறவு காப்பார்  

நாட்டின் கொடியை நாணயம் கொண்டு  

வானில் உயர்தி வையம் போற்றும்  


கல்வி கற்று கனவு சுமந்து  

களமிறங்கினாள் காரியம் முடிப்பாள்  

மொழிபல கற்று மனதில் இருத்தி  

பேச்சுவார்தையில் பெருமை சேர்பாள்  


கண்ணாடி கூரை கைகொண்டு உடைத்தாள்  

பாராளுமன்றம் படிகள் ஏறினாள்  

தூதரகத்தில் துணிவுடன் நின்றாள்  

பெண்மை பெருமை பெற்றது இன்று  


சமாதானம் தேடி சரித்திரம் படைத்தாள்  

பஞ்சம் போக்க பாதை வகுத்தாள்  

பிள்ளைகள் நலனை பேணியே காத்தாள்  

பாரதம் வாழ்தும் பண்புடை பெண்ணை  


மேசையில் அமர்ந்து மெல்ல பேசுவாள்  

நாடுகள் நடுவே நட்பை வளர்பாள்  

போரை தவிர்து பூசல் தீர்பாள்  

அகிம்சை கொள்கை அவளின் ஆயுதம்  


விசா பெறவும் விதிமுறை செய்ய  

வணிகம் வளர்க வழிகள் காண்பாள்  

புலம்பெயர்ந்தோர் புன்னகை காண  

தூரத்து தேசம் துணையாய் நிற்பாள்  


இரவும் பகலும் இமைமூடாமல்  

இன்னல் களைய இடையறாது உழைப்பாள்  

குடும்பம் மறந்து கடமை ஆற்றி  

கொள்கைக்காய் வாழும் குணமுடை பெண்  


சிறுமியர் கண்ணில் சிகரம் காட்டுவாள்  

நீயும் ஆகலாம் நெஞ்சில் நிறுத்துவாள்  

புத்தகம் ஏந்தி புறப்படு என்பாள்  

பொறுமையும் துணிவும் போதும் என்பாள்  


ஐக்கிய நாடு அவையில் நின்று  

அனைவர் குரலாய் அவள் முழங்குவாள்  

மனித உரிமை மாசின்றி காப்பாள்  

சமத்துவம் வேண்டி சரணம் புகுவாள்  


பாரம்பரியம் காக்க பாடுபடுவாள்  

பண்பாட்டு பாலம் புதிதாய் அமைப்பாள்  

கலையும் இலக்கியம் கைகொடுத்து வளர்பாள்  

நாகரிகம் நாடி நல்லறம் செய்வாள்  


இளம்பெண்ணே நீயும் இலக்கை தொடுவாய்  

அறிவால் உயர்ந்து அகிலம் ஆள்வாய்  

தூதராய் மாறி துயரம் போக்குவாய்  

மகளிர் தினமிது மாண்பை பாடும்  


வெற்றி கண்டாலும் வீறாப்பு கொள்ளாள்  

தோல்வி வந்தாலும் துவண்டிட மாட்டாள்  

நாளைய வரலாறு நங்கையர் கையில்  

நாட்டை உயர்தும் நற்றூதர் வாழ்க


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"அப்பாவையே காணோம்?": முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

news

திமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி

news

"இனி கூட்டணி வேண்டாம், தனித்துப் போட்டியிடுவோம்!" – ஆ.ராசா அதிரடி பேச்சு

news

தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

news

மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

news

மின்வாரிய நிதிநிலை...வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்

news

இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? சூசகமாக சொன்ன கே.என்.நேரு

news

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை தீர்த்துக் கட்ட திட்டமிட்ட இஸ்ரேல்.. பரபரப்புத் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்