சென்னை: சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நன்றி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
நேற்று தங்களின் தமிழ்நாட்டு வருகை எங்களுக்கு ஒரு சாதாரண வருகையல்ல; அது சோர்ந்து கிடந்த எங்கள் ஒவ்வொரு தொண்டரின் உள்ளத்திலும் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் விதைத்த ஒரு மகத்தான தருணம்!
தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட சோர்வு, இடையில் கட்சியில் எதிர்கொண்ட சவால்கள் என அனைத்தையும் கடந்து, தங்களை வரவேற்பதற்காக எங்கள் தொண்டர்கள் ஒவ்வொருவரும் புத்துணர்ச்சியுடன் எழுந்து நின்ற காட்சி மறக்க முடியாதது. ஒவ்வொரு முகத்திலும் ஒரு புதிய நம்பிக்கை! ஒவ்வொரு இதயத்திலும் ஒரு புதிய உறுதி! தமிழகத்தில் தாமரையை மேலும் வலிமைப்படுத்துவோம் என்ற அந்த உறுதியைத் தங்களின் வருகை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது.
நன்றி மோடிஜி! எங்களுக்குப் புதிய உயிரும், புதிய உத்வேகமும் அளித்ததற்கு!

தமிழ்நாட்டிற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கை மகத்தானது. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
சென்னை ஐஐடியில் மூளை ஆராய்ச்சி மையத்தின் மீது தாங்கள் காட்டிய அக்கறை, நரம்பியல் ஆராய்ச்சியில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கும், எதிர்காலத் தலைமுறையின் அறிவாற்றலுக்கும் தாங்கள் அளிக்கும் முக்கியத்துவம் பாராட்டுக்குரியது.
ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளிக் குழந்தைகளிடம் தாங்கள் உரையாடிய விதம் என் மனதை நெகிழச் செய்தது. வருங்கால இளைய தமிழகம் தங்களின் தொலைநோக்குப் பார்வையையும், நல்லெண்ணத்தையும் புரிந்துகொண்டு, “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளது” என்ற தங்களின் உயரிய சிந்தனையை நனவாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
முதலமைச்சர் அவர்களும் தாங்களும் வெளிப்படுத்திய “கட்சி வேறு, ஆட்சி வேறு” என்ற ஜனநாயகப் பண்பும், நட்புறவை மதிக்கும் அணுகுமுறையும் ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
அரசியல் சவால்களுக்கு மத்தியில் எங்களுக்குப் புதிய நம்பிக்கையையும், தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தையும், தமிழகத்திற்கு வளர்ச்சியின் மீதான புதிய எதிர்பார்ப்பையும் அளித்துள்ளீர்கள்.
நன்றி பிரதமர் அவர்களே!
தங்களின் வருகைக்கு… எங்கள் தொண்டர்களுக்கு அளித்த உத்வேகத்திற்கு… தமிழகத்தின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் முயற்சிகளுக்கு… எங்கள் உள்ளங்களில் மீண்டும் நம்பிக்கையின் தீபத்தை ஏற்றியதற்கு…
மனமார்ந்த நன்றிகள் மோடிஜி!
தமிழகத்தில் தாமரை மேலும் மலரும்! மக்களின் நம்பிக்கையையும், தொண்டர்களின் உழைப்பையும் துணையாகக் கொண்டு, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தங்களின் கனவில் வளர்ச்சியடைந்த தமிழ்நாடு பெருமையுடன் பங்கெடுக்கும் என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை.
சமையல் With ஸ்வர்ணா.. வீட்டுக்காரருக்கு உப்புமா போரடிக்குதா.. இருக்கவே இருக்கே ரவா பொங்கல்!
அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்!
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடத் தடை: போராட்டங்கள் நடத்த 3 புதிய இடங்களை அறிவித்தது காவல்துறை!
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
நன்றி மோடிஜி.. சோர்ந்து கிடந்தோம்.. இப்ப Brisk ஆயிட்டோம்.. டாக்டர் தமிழிசை ஹேப்பி!
மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ...!
காடு வா வா வீடு போ போ!
உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி...அனைவரும் வருமாறு ராகுல் காந்தி அழைப்பு
{{comments.comment}}