டிராகன் படத்தை விடுங்க பாஸ்.. பழம் சாப்பிட்டிருக்கீங்களா.. எவ்வளவு சத்து இருக்கு தெரியுமா?

Mar 04, 2025,10:34 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


அடிக்கும் வெயிலுக்கு பழங்கள் பழச்சாறு சாலடுகள் எடுத்துக் கொள்வது உடலின் உஷ்ணம் தனித்து உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நாம் இன்று டிராகன் பழத்தை  பற்றிய தகவல்களை பார்ப்போம்.


டிராகன் பழம் ஒரு அலங்கார செடியாக தோட்டங்களில் வளர்ப்பர். இது இரு வகைகளில் வருகிறது ஒன்று உள் சதை பகுதி வெண்மை நிறமாகவும் மற்றொன்று சிவப்பு நிறமாகவும் இருக்கும். டிராகன் பழம் இப்போது அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது .இந்த பழ வகை வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த கற்றாழை வகை பழமாகும்.


டிராகன் பழ செடிகள் மாற்று முதல் அக்டோபர் வரை பூக்கும். இது பச்சை நிறமாக இருந்து சிவப்பு நிறமாக மாறும்போது பழம் அறுவடைக்கு தயாராக உள்ளது என்று சாகுபடி செய்வார் .இதில் விதைகள் நிறைந்த இனிமையான பழம் .உள் சதை தண்ணீர் நிறைந்த பழம் இதனை பிட்டாயா என்று அழைக்கப்படுகிறது.


என்ன சத்துக்கள்?


டிராகன் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து ,பாலி  அன்சாசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ,கரோட்டின், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஏராளமாக உள்ளன.  அதனுள் இருக்கும் கருப்பு விதைகளில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்  உள்ளன.


நன்மைகள்:




1.டிராகன் பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

2. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு நன்மை பயக்கிறது. குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.

3. இதை உண்பதால் இதய ஆரோக்கியத்திற்கு அதீத நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

4. இதில் உள்ள மெக்னீசியம் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.

5. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைய செய்கிறது.

6. இதனை உண்பதால் மூட்டு மற்றும் பற்களில் ஏற்படும் வலி பிரச்சனைகள் நீங்கும்.

7.உட்பகுதி சிறப்பு நிறம் கொண்ட டிராகன் பழத்தில் உள்ள பீட்டா லைன்கள் கெட்ட கொழுப்பை குறைக்கும்.

8. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

9. காய்ச்சல் ,சளி ஆகியவற்றைத் தடுத்து உடலை பாதுகாக்கும் திறனை மேம்படுத்துகிறது


எப்படி சாப்பிடலாம்?

டிராகன் பழத்தை   பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஃப்ரூட் ஜூஸ் ஆக குடிக்கலாம். ஃப்ரூட் சாலடுகளில் எல்லா பழங்களுடன் இதனை கட் செய்து சாப்பிடலாம். டிராகன் பழ மில்க் ஷேக் செய்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருக்கும். இனி மார்க்கெட் செல்லும் பொழுது டிராகன் ஃபுரூட் வாங்கி சாப்பிடலாமா.


மேலும் இதுபோன்ற சுவையான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்