ஹைதராபாத்: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, நடிகர் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தெலுங்குப் பட பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை (ED) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த பல சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் யூடியூபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட ஐந்து முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Junglee Rummy, JeetWin, மற்றும் Lotus365 போன்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகளைப் பிரபலப்படுத்தியதற்காக இந்தக் பிரபலங்கள் பெருமளவிலான விளம்பரக் கட்டணங்களைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தளங்கள் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் மூலம் கோடிக்கணக்கான சட்டவிரோத வருவாயை ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை கூறுகிறது. இந்தச் செயலிகள் பயனர்களை ஏமாற்றியதாகவும், பந்தய விதிமுறைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பிரபலங்கள் இவற்றுக்கான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அமலாக்கத்துறையால் பெயரிடப்பட்ட 29 பிரபலங்களில் நடிகைகள் மஞ்சு லக்ஷ்மி, நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், மற்றும் அனன்யா நாகல்லா ஆகியோரும், தொலைக்காட்சி பிரபலம் ஸ்ரீமுகியும் அடங்குவர். சில பிரபலங்கள் இந்தத் தளங்களின் சேவைகளின் துல்லியமான தன்மை குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள நிலையில், வரும் நாட்களில் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}