எடப்பாடி பழனிச்சாமி மீட்டிங் திடீர் ஒத்திவைப்பு.. பிரதமர் மோடி வருகை காரணமா?

Jan 18, 2024,05:11 PM IST
சென்னை: தமிழ்நாட்டிற்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை நடைபெற இருந்த அதிமு பொதுக்கூட்டம் 
வரும் 31ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கோலாகாலமாக கொண்டாட அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை (19.1.24) அதிமுக பொதுக் கூட்டம் வடசென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருந்தது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டதாம்.



இந்நிலையில் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவங்கி வைக்க நாளை சென்னை வரவுள்ளார். இதற்காக தமிழக முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  உஷார்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு போக்குவரத்து மாற்றங்களையும் காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் வருகின்ற 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்