சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டில் ஏப்ரல், மே காலங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு தனது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும். அந்த சமயத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் அதன் இனப்பெருக்கம் தடைபடும். இதனை கருத்தில் கொண்டு தமிழக மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ் மீன்களின் இனத்தை அதிகரிக்க ஏப்ரல்,மே காலங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு வருடமும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற் பகுதிகளில் மீனவர்கள் ஏப்ரல் மே காலங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான மீன் பிடி தடைக்காலத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு மீன்வளத்துறை.
இதில், தமிழக கிழக்கு கடற்கரைப் பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களிலும், கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. அதாவது மொத்தம் 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் சென்று ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதே சமயத்தில் பாரம்பரிய நாட்டுப் பட படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் மட்டும் ஐந்து மைல் தூரம் வரை சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் மீன் தடைபிடிக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு தலா 8000 நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!
உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!
கொள்ளிடத்தில்..தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!
நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!
இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.75,000 கடந்தது
{{comments.comment}}