சென்னை: என்னை மன்னிச்சிருங்க டாடி...நாங்க பிரிஞ்சுட்டோம்... எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது என்று ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பிரியா அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டார். நடிகர் முனிஷ் ராஜா சன்டிவியில் ஒளிபரப்பாகிய நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமானாவர். இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி சித்தி சீரியலிலும் நடித்தவர். சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் நடித்தவர்.
முனிஷ் ராஜா- பிரியா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு ராஜ்கிரண் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்ததது. இவர்கள் இருவரும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள். நடிகர் ராஜ்கிரணும் இவர்கள் காதலை எதிர்த்து சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் பிரியா. ராஜ்கிரண் சார் வளர்ந்த பொண்ணு. நான் முனிஷ் ராஜா என்பவரை 2022ல் கால்யாணம் செய்தேன். அது உங்க எல்லாருக்கும் மீடியா மூலம் தெரிந்திருக்கும்.
எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது. இந்த கல்யாணத்துக்கு அப்புறம் என்னை வளர்த்த டாடியை நான் ரொம்ப ஹர்ட் பண்ணீட்டேன். ஒன்னு இல்ல நெறையா ஹர்ட் பண்ணீட்டேன். உங்க கிட்ட எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னிச்சுடுங்க டாடி. நாங்க பிரிஞ்சுட்டோம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
பஹல்காம் தாக்குதல்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம்!
அக்ஷய திருதியை.. தங்கம் மட்டும்தானா.. இதெல்லாமும் கூட வாங்கலாம் மக்களே!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
கடலில் விழுந்து மூழ்கிய.. பல கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க போர் விமானம்.. 2 வீரர்கள் மீட்பு!
{{comments.comment}}