சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் பாஜக வாக்கு வங்கி 3 சதவீதத்தைத் தாண்டாது என முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளை விரைவுபடுத்தியுள்ளன. அதிமுக, பாஜக கூட்டணிகளை இறுதி செய்ய பேச்சு நடத்தி வரும் நிலையில் திமுக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

தமிழ்நாட்டில் அண்ணாமலை நடத்தி வந்த என் மண் என் மக்கள் யாத்திரை நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனை பிரமாண்ட நிகழ்வாக நடத்தியுள்ளது பாஜக. கோவை பல்லடத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அதிகாரத்தில் இல்லை. ஆனாலும் பாஜகவின் இதயத்தில் எப்போதும் தமிழ்நாடு இருந்து கொண்டே இருக்கிறது. அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளும் இதை உணர்ந்துள்ளனர், புரிந்துள்ளனர். அதுகுறித்த விழிப்புணர்வுடன் அவர்கள் உள்ளனர்.
இந்த மாநிலத்தை பல காலமாக ஊழல்களால் கொள்ளையடித்தவர்கள் இதனால்தான் பாஜகவைப் பார்த்துப் பயப்படுகின்றனர். பாஜக வளர்வதைப் பார்த்துப் பயப்படுகின்றனர். பாஜக அதிகாரத்திற்கு வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர் என்று ஆவேசமாக கூறினார். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சிகளையும் அவர் புகழ்ந்து பேசினார்.
அதிமுக வாக்கு வங்கிக்குக் குறி வைக்கும் பாஜக

இதுகுறித்து சென்னையில் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நல்ல கூட்டணி எங்கள் தலைமையில் அமையும். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த 2 நாட்களில் எல்லாம் தெரிந்து விடும்.
பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜாக வாக்கு வங்கி 3 விழுக்காட்டை தாண்டாது. அண்ணாமலை பில்டப் கொடுக்கிறார். சில மீடியாவை கையில் வைத்துக் கொண்டு பில்டப் கொடுத்தாலும் 3 விழுக்காட்டிற்கு மேல் பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை.
அவர்கள் திட்டுவார்கள்.. நாங்களும் திட்டுவோம்

எங்களை அவர்கள் திட்டுவார்கள்.. எங்கள் ஆட்களும் அவர்களை திட்டுவார்கள். ரிசல்ட் வரும் போது தான் தெரியும், தேசிய கட்சிகளுக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிடம் vs திராவிடம் என்பது தான் நிதர்சனம். எங்களுக்கு எதிரி திமுக. திமுகவை விழ்த்துவது தான் எங்கள் வேலை. பாஜக எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது என்று கூறியுள்ளார்.
அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்
ஏன் எதற்கு எதனால்?
டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!
வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!
NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்
அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)
{{comments.comment}}